இந்து பண்டிகைகளை மட்டும் குறிப்பிட்ட பிரதமர் மோடி…. டிவிட்டர்வாசிகள் கடும் விமர்சனம்…

 

இந்து பண்டிகைகளை மட்டும் குறிப்பிட்ட பிரதமர் மோடி…. டிவிட்டர்வாசிகள் கடும் விமர்சனம்…

பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, எதிர்வரும் பண்டிகை மாதங்களில் தேவைகள் மற்றும் செலவுகள் அதிகரிக்கும் என்பதை கருத்தில் கொண்டு பிரதம மந்திரி கரிப் கல்யாண் திட்டத்தை தீபாவளி மற்றும் சாத் பூஜை வரை, உதாரணமாக நவம்பர் இறுதி வரை மேலும் 5 மாதங்களுக்கு நீட்டிக்கப்படும் என தெரிவித்தார். அதாவது 80 கோடி மக்களுக்கு இலவசமாக உணவு தானியங்கள் வழங்கப்படும் என தெரிவித்தார்.

இந்து பண்டிகைகளை மட்டும் குறிப்பிட்ட பிரதமர் மோடி…. டிவிட்டர்வாசிகள் கடும் விமர்சனம்…

பிரதமர் மோடி திருவிழா சீசனை குறிப்பிடும் போது ஜூலை முதல் நவம்பர் வரை ஒவ்வொரு பண்டிகையாக குறிப்பிட்டு பேசினார். ஜூலை 5ம் தேதியன்று குரு பூர்ணிமா கொண்டாடப்பட உள்ளது. அடுத்து சாவான் தொடங்குகிறது. மேலும், ரக்ஷா பந்தன், கிருஷ்ணா ஜென்மாஷ்டமி, விநாயகர் சதுர்த்தி, ஓணம், கதி பிஹூ, நவராத்திரி, துர்கா பூஜை மற்றும் தசரா என வரிசையாக பண்டிகைகளை குறிப்பிட்டார். ஆனால் அந்த மாதங்களில் வரும் இஸ்லாமிய பண்டிகைகளை குறிப்பிடவில்லை. தற்போது இதனை டிவிட்டர்வாசிகள் குறிப்பிட்டு விமர்சனம் செய்துள்ளனர்.

இந்து பண்டிகைகளை மட்டும் குறிப்பிட்ட பிரதமர் மோடி…. டிவிட்டர்வாசிகள் கடும் விமர்சனம்…

இதுதொடர்பாக டிவிட்டரில் ஒருவர், இந்தியாவில் முஸ்லீம்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினரும் தங்களது திருவிழாவை கொண்டாடுகிறார்கள் என்பதை மறந்து விட்டார்கள் என ஒருவர் பதிவு செய்து இருந்தார். மற்றொருவர், 17.2 கோடி முஸ்லீம்களும் அடங்கிய ஒரு நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி தனது தேச உரையில் வரவிருக்கும் மாதங்களில் நடக்கும் ஒவ்வொரு பண்டிகையையும் குறிப்பிடுகிறார் ஆனால் பக்ரீத் பண்டிகையை குறிப்பிடவில்லை.அற்பம் என குறிப்பிட்டார். மற்றொரு டிவிட்டர்வாசி தனது பதிவில், சாத் பூஜையை இருமுறை குறிப்பிட்டார் ஆனால் நம் நாட்டின் 2வது பெரிய சமுதாயத்தின் பண்டிகையான பக்ரீத் மற்றும் மொஹரத்தை அவர் குறிப்பிடவில்லை என பதிவு செய்து இருந்தார்.