நீட், ஜே.இ.இ. தேர்வுகள் ஒத்திவைப்பு இல்லை… மத்திய கல்வி அமைச்சரை பதவி விலகக்கோரும் டிவிட்டர்வாசிகள்

நீட், ஜே.இ.இ. தேர்வுகள் ஒத்திவைப்பு இல்லை… மத்திய கல்வி அமைச்சரை பதவி விலகக்கோரும் டிவிட்டர்வாசிகள்

கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதோடு, சரியான போக்குவரத்து வசதிகளும் இல்லாததால் நீட், ஜே.இ.இ. உள்ளிட்ட தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என நாடு முழுவதும் மாணவர்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் இந்த தேர்வுகளை ஒத்திவைக்கக்கோரி உச்ச நீதிமன்றத்திலும் பொது நல வழக்கு தொடரப்பட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்து விட்டது.

நீட், ஜே.இ.இ. தேர்வுகள் ஒத்திவைப்பு இல்லை… மத்திய கல்வி அமைச்சரை பதவி விலகக்கோரும் டிவிட்டர்வாசிகள்
மத்திய கல்வி துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

இதனையடுத்து தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) நேற்று முன்தினம், கூட்டு நுழைவு தேர்வு (ஜே.இ.இ.) (மெயின்) தேர்வு செப்டம்பர் 1ம் தேதி முதல் 6ம் தேதி வரை நடைபெறும் என்றும், நீட் தேர்வு செப்டம்பர் 13ம் தேதி அன்றும் நடைபெறும் என அறிவித்தது. இது மாணவர்கள் மத்தியில் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நீட் உள்ளிட்ட தேர்வுகள் ஒத்திவைக்கப்படாததால் டிவிட்டரில், #ResignNishankPokhriyal(ராஜினாமா நிஷாங்க் பொக்ரியால்) என்ற ஹேஸ்டேக்கை டிவிட்டர்வாசிகள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

நீட், ஜே.இ.இ. தேர்வுகள் ஒத்திவைப்பு இல்லை… மத்திய கல்வி அமைச்சரை பதவி விலகக்கோரும் டிவிட்டர்வாசிகள்
சுப்பிரமணியன் சுவாமி

எடுத்துக்காட்டாக, டிவிட்டரில் பாரதி டிரிபல் என்பவர், திரு.டாக்டர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் ஜி பல லட்சக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையை ஆபத்தில் தள்ள வேண்டாம். கோவிட் மத்தியில், மாணவர்களின் வாழ்க்கை விஷயம், அனைத்து தேர்வுகளையும் ஒத்திவை\ரத்து செய். பிரதமர் நரேந்திர மோடி ஜி தயவு செய்து உங்களது சொந்த மாணவர்களை கேளுங்க. அவர்கள் பெரிய மன அழுத்தத்தையும், பதற்றத்தையும் சந்திக்கிறார்கள் என பதிவு செய்து இருந்தார். மேலும் #ResignNishankPokhriyal என்பதையும் பதிவு செய்து இருந்தார். பா.ஜ.க. தலைவரும், எம்.பி.யுமான சுப்பிரமணியன் சுவாமி நீட் உள்ளிட்ட தேர்வுகளை தீபாவளிக்கு பிறகு நடத்துமாறு பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.