ட்விட்டரில் ட்ரெண்டாகும் #YaaruPaAndhaRaghu! என்னாவா இருக்கும்!!

 

ட்விட்டரில் ட்ரெண்டாகும் #YaaruPaAndhaRaghu! என்னாவா இருக்கும்!!

தமிழகத்தில் ஒரு பக்கம் கொரோனா பரவல், மற்றொரு மக்கம் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் என தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. அரசியல் கட்சியினர் முதல் திரையுலக பிரபலங்கள் வரை எதோ ஒரு தேடுதலை நோக்கியும், மன அமைதி இல்லாமலும் கலக்கத்தில் உள்ளனர்.

இன்னொரு பக்கம் ரஜினி, விஜய், சூர்யா ரசிகர்கள் போஸ்டர் அரசியலை தெறிக்கவிட்டு வருகின்றனர். மற்றொரு பக்கம் ஒரு கட்சியினர் மற்றொரு கட்சிக் குறித்து அடுக்கடுக்கான புகாரை பேட்டி வாயிலாக தெரிவித்து அதிரடி காட்டிவருகின்றனர். கடந்த சில நாட்களாகவே ப்ரேக்கிங் செய்தி என்றாலே மருத்துவமனை அறிக்கைகளும், கொரோனா பாதிப்பு நிலவரங்களுமே.

https://twitter.com/LMKMovieManiac/status/1309108178706198529?s=19

இத்தகைய பரபரப்பான சூழலில்தான் ட்விட்டரில் ட்ரெண்டாகிறது #YaaruPaAndhaRaghu. இதனை பார்த்த அடுத்த நொடியே யாருப்பா இந்த ரகு. எதற்காக இந்த விளம்பரம் என யோசிக்க வைக்கிறது. தமிழகத்தில் இப்போது அரங்கேறிக்கொண்டிருக்கும் கலேபரத்துக்கு மத்தியில் இதுபோன்ற கொண்டாட்டங்கள் தேவையா என்றும் கேள்வி எழுப்ப நினைக்கிறது.

#YaaruPaAndhaRaghu என்ற ஹேஷ்டேக்கை திரையுலக பிரபலங்களும், இணையதள செய்தி நிறுவனங்களும், யூடியூப் சேனல்களும் தங்களின் அதிகாரப் பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு அதளப்படுத்திவருகின்றனர்.

யாருப்பா இந்த ரகு? ஒரு சீரியலாக இருக்குமோ? படமா இருக்குமோ அல்லது விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியாக இருக்குமோ, சாமானியருக்கும் அரசியல் சொல்லி கொடுக்கும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகவோ, பிரச்சார மேடையாகவோ இருக்குமோ என பல கோணத்தில் சிந்திக்கவைக்கிறது. எதற்காக இந்த புரொமோஷன் என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். ஆனால் அந்த ரகு உலகத்துக்கு ஏதோ சொல்ல வருகிறார் என்பது மட்டும் வைரலாகும் புகைப்படங்கள் சொல்கிறது. ரகுவை கண்டுபிடிக்க அனைவரும் எப்படி ஆவலுடன் இருக்கின்றனரோ அதே ஆவலுடன் நாங்களும் இருக்கின்றோம். விரைவில் அந்த ரகுவை சேர்ந்து கண்டுபிடிப்போம்!