டெல்லி வன்முறையை தூண்டிய 550க்கும் மேற்பட்டோரின் ட்விட்டர் கணக்குகள் முடக்கம்!

டெல்லி வன்முறையை தூண்டிய 550க்கும் மேற்பட்டோரின் ட்விட்டர் கணக்குகள் முடக்கம்!

விவசாய பேரணியின்போது வன்முறையை தூண்டும் விதமாக பதிவிட்ட 550க்கும் மேற்பட்டோரின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் கூறியுள்ளது.

டெல்லியில் கடந்த இரண்டு மாதங்களாக வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் நேற்று உச்சக்கட்டத்தை எட்டியது. குடியரசு தினத்தை முன்னிட்டு மாபெரும் டிராக்டர் பேரணிக்கு விவசாய சங்கங்கள் ஏற்பாடு செய்திருந்தனர். பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பேரணி நேற்று தொடங்கியது.

டெல்லி வன்முறையை தூண்டிய 550க்கும் மேற்பட்டோரின் ட்விட்டர் கணக்குகள் முடக்கம்!

ஆரம்பத்தில் அமைதியாக நடைபெற்ற பேரணி பின்னர் வன்முறையாக வெடித்தது. அறிவுறுத்திய பாதை வழியாக செல்லாமல், வேறு வழியில் சென்றதால் காவல் துறையினருக்கும் விவசாயிகளுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இரு தரப்பும் பயங்கரமாக மோதிக் கொண்டன. இதனால் பலர் படுகாயமடைந்தனர்.

144 தடை உத்தரவுக்கு பின் நிலைமை சீராகிவரும் நிலையில், வன்முறையாளர்களை இனங்கண்டு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துவருகின்றனர். நேற்று வன்முறையைக் கட்டுப்படுத்த இணைய வசதி துண்டிக்கப்பட்டிருந்தது.

டெல்லி வன்முறையை தூண்டிய 550க்கும் மேற்பட்டோரின் ட்விட்டர் கணக்குகள் முடக்கம்!

இச்சூழலில் வன்முறையைத் தூண்டியதாகக் கூறி ட்விட்டர் நிறுவனம் 550க்கும் மேற்பட்டோரின் கணக்குகளை முடக்கியுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. தங்கள் நிறுவன கொள்கைகளுக்கு எதிராகவும் வன்முறை உணர்வை அதிகப்படுத்தும் நோக்கிலும் ட்வீட் செய்தவர்களின் கணக்குகளை முடக்கியதாக விளக்கமளித்துள்ளது.