மாஸ்டர் வார்த்தை நீக்கம்… பேர் அண்ட் லவ்லியைத் தொடர்ந்து ட்விட்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை!

மாஸ்டர் வார்த்தை நீக்கம்… பேர் அண்ட் லவ்லியைத் தொடர்ந்து ட்விட்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை!

ஒருபுறம் கொரோனா என்ற கொடூரன் மக்களின் உயிரை வாரி சுருட்டிக் கொண்டு போய்க்கொண்டிருக்க மறுபுறம் மனிதர்கள் மீது மனிதர்களே நிகழ்த்தும் வன்மங்கள் வெடித்துக் கொண்டிருக்கின்றன.

அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்டு என்ற கறுப்பினத்தைச் சேர்ந்த நபர் போலீசாரால் கொல்லப்பட்ட சம்பவம் அந்த நாட்டின் மிகப்பெரிய போராட்டத்தை வெடிக்கச் செய்தது. கிழக்கு நாடுகளிலும் ‘பிளாக் லிவ்ஸ் மேட்டர்’ ( Black Lives Matter) என்ற இயக்கம் உருவாகும் அளவிற்கு உலகமெங்கும் எதிர்ப்புக்குரல்கள் மேலோங்கின.

மாஸ்டர் வார்த்தை நீக்கம்… பேர் அண்ட் லவ்லியைத் தொடர்ந்து ட்விட்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை!

பிளாக் லிவ்ஸ் மேட்டர் உலகம் முழுதும் பரபரப்பை ஏற்படுத்தியதால் ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம் தங்கள் தயாரிப்பான ஃபேர் அண்ட் லவ்லி (Fair & Lovely) என்ற பெயரை க்ளோ அண்ட் லவ்லி (Glow and Lovely) என்று மாற்றியுள்ளனர்..

மாஸ்டர் வார்த்தை நீக்கம்… பேர் அண்ட் லவ்லியைத் தொடர்ந்து ட்விட்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை!

தற்போது ட்விட்டர் நிறுவனமும் இனப் பாகுபாட்டை குறிப்பது போன்ற வார்த்தைகளான மாஸ்டர்(Master), ஸ்லேவ்(Slave) மற்றும் ப்ளாக்லிஸ்ட்(Blacklist) என்ற வார்த்தைகளை தங்கள் தளத்தில் இருந்து நீக்கம் செய்துள்ளனர்.

இது குறித்து தெரிவித்த ட்விட்டர் நிறுவனம் “ஒவ்வொரு வார்த்தையும் நிறைய அர்த்தங்கள் கொண்டிருக்கின்றன. அதேநேரத்தில் எங்கள் தளத்தை பயன்படுத்தும் வார்த்தைகளை நாங்கள் எளிதாக்க விரும்புகிறோம். வெள்ளை மற்றும் கருப்பு நிறங்கள் குறிக்கும் வார்த்தைகளை அதே பொருள் தரும் வேறு வார்த்தைகளால் மாற்றுவதற்கு வேலை செய்துவருகிறோம். அதேபோல் மாஸ்டர்(Master)/ ஸ்லேவ்(Slave) என்ற வார்த்தைகளை லீடர்(Leader)/பாலோவர்(Follower) என்ற வார்த்தைகளால் மாற்றப்பட்டுள்ளது.