சர்ச்சை ட்வீட்… மனிதநேயமற்ற செயல்… சீனாவின் கணக்கை லாக் செய்த ட்விட்டர்!

 

சர்ச்சை ட்வீட்… மனிதநேயமற்ற செயல்… சீனாவின் கணக்கை லாக் செய்த ட்விட்டர்!

உய்குர் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக அமெரிக்காவிலுள்ள சீன தூதரகம் வெளியிட்ட ட்வீட் தங்களது கொள்கைகளுக்கு முரணாக இருப்பதாகக் கூறி, தூதரக கணக்கை ட்விட்டர் நிறுவனம் தற்காலிகமாக முடக்கியுள்ளது.

சீனாவில் சிறுபான்மையினர்களான உய்குர் இஸ்லாமிய மக்களை அந்நாடு அரசு ஒடுக்குவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட உய்குர் இஸ்லாமிய மக்களை முகாம்களில் அடைத்துவைத்து சீன அரசு கொடுமைப்படுத்துவதாகக் கூறி ஐநாவில் உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துவந்தன.

சர்ச்சை ட்வீட்… மனிதநேயமற்ற செயல்… சீனாவின் கணக்கை லாக் செய்த ட்விட்டர்!

சீனா இதனை தொடர்ந்து மறுத்துவந்தாலும், பயங்கரவாதத்துக்கு எதிராக போராட பயிற்சியளிப்பதற்காக அம்மக்களை முகாம்களில் தங்கைவைத்துள்ளதாக போலியான ஒரு காரணத்தை கூறியது. உய்குர் இஸ்லாமியர்களின் கலாச்சாரத்தை அழிக்கும் விதமாக அவர்களுக்கு அடிப்படை உரிமையான பேச்சுரிமை கூட மறுக்கப்பட்டுள்ளது. சுதந்திரமாக மத வழிபாடுகள் செய்யவும் அனுமதிக்கப்படுவதில்லை.

அதேபோல அவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிடக் கூடாது என்பதற்காக, அம்மக்களை கட்டாய கருத்தடை, கருக்கலைப்பு, குடும்ப கட்டுப்பாடு செய்ய சீன அரசு வற்புறுத்துவதாகவும் தகவல் வெளியானது. சீனாவின் இந்த மனித உரிமை மீறலில் பல்வேறு நாடுகளும் அதிருப்தியில் இருக்கின்றன.

சர்ச்சை ட்வீட்… மனிதநேயமற்ற செயல்… சீனாவின் கணக்கை லாக் செய்த ட்விட்டர்!

இச்சூழலில் அமெரிக்காவில் இருக்கும் சீன தூதரகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்று பதிவிடப்பட்டிருந்தது. அதில், உய்குர் இஸ்லாமிய குடும்ப புகைப்படத்துடன், “பெண்கள் ஒன்றும் குழந்தைகளை பெற்றுக்கொடுக்கும் இயந்திரம் அல்ல” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்புகைப்படத்தில் ஒரு பெண்ணுடன் கணவனும், அவளது நான்கு குழந்தைகளும் காணப்பட்டனர். இந்தக் கருத்தை மேலோட்டமாகப் பார்க்கும்போது சரியாக தெரிந்தாலும், ஆழ்ந்து பார்த்தால் உய்குர் மக்களின் மீதான சீனாவின் வன்மம் வெளிப்பட்டது தெரிகிறது. கட்டாய குடும்ப கட்டுப்பாடு போன்ற தகவல்களை இந்த ட்வீட் உறுதிப்படுத்துவது போல் அமைந்துள்ளது.

சர்ச்சை ட்வீட்… மனிதநேயமற்ற செயல்… சீனாவின் கணக்கை லாக் செய்த ட்விட்டர்!

சீன தூதரகத்தின் இந்த ட்வீட்டை மனிதநேயமற்றது என்று விமர்சித்திருக்கும் ட்விட்டர் நிறுவனம், தங்களது கொள்கைகளுக்கு எதிராக இருப்பதாகக் கூறி நீக்கியுள்ளது. சிறுபான்மையினர் மீதான மனிதநேயமற்ற தாக்குதல்களை பொறுத்துக்கொண்டு இருக்க முடியாது என தெரிவித்து சீன தூதரகத்தின் கணக்கை தற்காலிகமாக முடக்கிவைத்துள்ளது. சீனாவில் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.