ட்விட்டரில் ‘வாய்ஸ் ட்வீட்’ அம்சம் அறிமுகம் – குரலை ரெக்கார்ட் செய்து ட்வீட் செய்யலாம்

 

ட்விட்டரில் ‘வாய்ஸ் ட்வீட்’ அம்சம் அறிமுகம் – குரலை ரெக்கார்ட் செய்து ட்வீட் செய்யலாம்

உங்கள் குரலில் ரெக்கார்ட் செய்து ட்வீட் செய்யக் கூடிய ‘வாய்ஸ் ட்வீட்’ அம்சத்தை ட்விட்டர் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

ட்விட்டர் நிறுவனம் குரலில் ரெக்கார்ட் செய்து ட்வீட் செய்யக் கூடிய ‘வாய்ஸ் ட்வீட்’ அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. பின்தொடர்பாளர்களுக்கு என்ன செய்தி சொல்ல நினைக்கிறோமோ அதை பேசி ரெக்கார்ட் செய்து ட்வீட்டாக பதிவிட முடியும்.

தற்போதைக்கு ஐ.ஓ.எஸ் பயனர்களுக்கு இந்த அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூடிய விரைவில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் இந்த அம்சம் அறிமுகம் செய்யப்படும்.

ட்விட்டரில் ‘வாய்ஸ் ட்வீட்’ அம்சம் அறிமுகம் – குரலை ரெக்கார்ட் செய்து ட்வீட் செய்யலாம்

கம்போசர் பகுதியை திறந்து கேமரா ஐகானுக்கு அருகில் உள்ள ரெக்கார்ட் ஆப்ஷனுக்கான ‘வேவ்லெங்த்’ ஐக்கானை க்ளிக் செய்ய வேண்டும். இதையடுத்து உங்கள் புரொஃபைல் பிக்சருடன் ரெக்கார்டிங் பட்டனை காண முடியும்.

இதைத் தொடர்ந்து அதன் மூலம் உங்கள் குரலில் பேசி பதிவு செய்து ட்வீட் செய்ய முடியும். வாய்ஸ் ட்வீட்டில் அதிகபட்சமாக 140 நொடிகள் ஆடியோவை பதிவு செய்ய முடியும். அந்த டைம் லிமிட்டுக்கு பிறகும் தொடர்ந்து குரலை தொடர்ந்து பதிவு செய்தால் இன்னொரு த்ரெட்டாக பதிவாகும்.