இந்திய மேப்பில் காஷ்மீர், லடாக்கை தூக்கிய ட்விட்டர் – எம்டி மீது எப்ஐஆர் பதிவு!

இந்திய மேப்பில் காஷ்மீர், லடாக்கை தூக்கிய ட்விட்டர் – எம்டி மீது எப்ஐஆர் பதிவு!

ட்விட்டர் நிறுவனமும் மத்திய அரசும் கீரியும் பாம்பாகவே சண்டையிட்டுக் கொள்கின்றன. எதையாவது ஒன்றை குதர்க்கமாக செய்துவிட்டு மத்திய அரசிடம் நன்றாக வாங்கி கெட்டிக் கொள்கிறது. ஏற்கெனவே புதிய சட்ட விதிகளுக்கு இணங்காமல் மத்திய அரசுக்கு ட்விட்டர் தண்ணி காட்டி வந்தது. அதுமட்டுமில்லாமல் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோரின் ட்விட்டர் கணக்கிலிருந்து ப்ளூ டிக்கை தூக்கி மத்திய அரசின் கடும் கோபத்திற்குள்ளாக்கியது.

இந்திய மேப்பில் காஷ்மீர், லடாக்கை தூக்கிய ட்விட்டர் – எம்டி மீது எப்ஐஆர் பதிவு!

அதேபோல சில நாட்களுக்கு முன் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் ட்விட்டர் கணக்கை பிளாக் செய்து அதிரடி காட்டியது. இச்சூழலில் நேற்று ட்விட்டர் இணையதளத்தில் Tweef Life என்ற பகுதியில் வெளியிடப்பட்டிருக்கும் இந்திய வரைபடத்தில் ஜம்மு காஷ்மீரையும் காணவில்லை. லடாக்கும் இல்லை. இரண்டுமே தனி நாடுகளாக வரைந்து காட்டியிருக்கிறது ட்விட்டர். இந்திய-சீன எல்லையில் சர்ச்சைக்குரிய பகுதியான லே பகுதியை சீனாவுடன் சேர்த்து மத்திய அரசை உச்சக்கட்ட கோபத்திற்குள்ளாக்கியது.

இந்திய மேப்பில் காஷ்மீர், லடாக்கை தூக்கிய ட்விட்டர் – எம்டி மீது எப்ஐஆர் பதிவு!

ட்விட்டரின் இந்தச் செயலுக்கு மத்திய அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும் என கூறப்படுகிறது. ஆனால் அதற்கு முன்னரே உத்தரப் பிரதேசத்தில் வழக்கு தொடரப்பட்டுவிட்டது. பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்த நிர்வாகி அளித்த புகாரின் பேரில் புலந்த்ஷாஹர் காவல் துறையினர் ட்விட்டர் இந்தியாவின் மேலாண் இயக்குநர் (MD) மனிஷ் மகேஸ்வரி மீது எப்ஐஆர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்திய மேப்பில் காஷ்மீர், லடாக்கை தூக்கிய ட்விட்டர் – எம்டி மீது எப்ஐஆர் பதிவு!

இவர் மீது ஏற்கெனவே ஒரு வழக்கு காசியாபாத் காவல் நிலையத்தில் நிலுவையில் இருக்கிறது. தொடர்ந்து இம்மாதிரியான வழக்குகளை ட்விட்டர் எதிர்கொள்வதற்குக் காரணம் மத்திய அரசு தான். புதிய ஐடி விதிகளுக்கு உடன்படாததால் அந்நிறுவனத்துக்கான சட்டப் பாதுகாப்பை மத்திய அரசு விலக்கிக் கொண்டது. இதன் காரணமாக ட்விட்டரில் யார் என்ன சர்ச்சை பதிவுகள் இட்டாலும் அதற்கு ட்விட்டர் தான் பொறுப்பு.