“ட்விட்டர் வேண்டுமென்றே அடம்பிடிக்கிறது” – வெளுத்து வாங்கிய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்!

 

“ட்விட்டர் வேண்டுமென்றே அடம்பிடிக்கிறது” – வெளுத்து வாங்கிய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்!

டெல்லி விவசாயிகள் போராட்டத்திலிருந்தே ட்விட்டருக்கும் மத்திய அரசுக்கும் உரசல்கள் ஏற்பட்டு வருகின்றன. அரசுக்கு எதிராக கருத்து சொல்பவர்களின் ட்விட்டர் கணக்குகளை முடக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால் அது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என்று கூறி கணக்குகளை முடக்க ட்விட்டர் மறுத்தது. அப்போதிருந்தே ட்விட்டருக்கும் மத்திய அரசுக்கும் ஏழாம் பொருத்தமாக இருக்கிறது. இச்சூழலில் மத்திய அரசு புதிய சட்ட விதிகளைக் கொண்டுவந்தது.

“ட்விட்டர் வேண்டுமென்றே அடம்பிடிக்கிறது” – வெளுத்து வாங்கிய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்!

சமூக வலைதள நிறுவனங்கள் புகார்களைப் பெறுவது, நடவடிக்கை எடுப்பது போன்றவற்றுக்காக இந்தியாவில் அதிகாரிகளை நியமிக்க வேண்டும். சட்ட ரீதியான உத்தரவுக்கு 36 மணி நேரத்துக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்ச்சைக்குரிய பதிவை யார் முதலில் பதிந்தது என்ற விவரத்தை அரசுடன் பகிர வேண்டும். அரசு சொன்னால் அந்தப் பதிவை நீக்க வேண்டும் உள்ளிட்ட விதிகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த விதிகளுடன் உடன்பட மே 25ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டது. ட்விட்டரை தவிர மற்ற சமூக வலைதள நிறுவனங்களும் அரசின் விதிகளுக்கு இணங்கின.

“ட்விட்டர் வேண்டுமென்றே அடம்பிடிக்கிறது” – வெளுத்து வாங்கிய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்!

ஆனால் ட்விட்டர் மட்டும் அரசுக்கு தண்ணி காட்டி வந்தது. மாறாக புதிய விதிகள் இந்தியர்களின் கருத்துரிமைக்கு எதிராக இருப்பதாக குற்றஞ்சாட்டியது. இது மத்திய அரசைக் கோபத்துக்குள்ளாக்கியது. வெங்கையா நாயுடுவின் ஃப்ளு டிக்கை ட்விட்டர் நீக்க மோதல் உச்சம் பெற்றது. இறுதி எச்சரிக்கை நோட்டீஸை மத்திய அரசு அனுப்பியது. இப்போதே உடன்படாவிட்டால் சட்ட ரீதியான விளைவுகளுக்கு ஆளாக நேரிடும் என எச்சரித்தது. ஆனால் அப்போதும் ட்விட்டர் இசையவில்லை. தற்போது வரை விதிகளுக்கு உடன்படுவதாக தெரிவிக்கவில்லை.

“ட்விட்டர் வேண்டுமென்றே அடம்பிடிக்கிறது” – வெளுத்து வாங்கிய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்!

இச்சூழலில் Intermediary என்ற நெறிமுறைகளை ட்விட்டர் பின்பற்ற தவறியதால் அதற்கான சட்டப் பாதுகாப்பை அரசு விலக்கிக் கொண்டது. இதன்மூலம் ட்விட்டரில் யார் என்ன சர்ச்சை கருத்து கூறினாலும் அதற்கு ட்விட்டரே முழு முதற் பொறுப்பு. ட்விட்டர் மீது யார் வேண்டுமானாலும் நடவடிக்கை எடுக்கலாம் என்பதே இதற்கான அர்த்தம். இதையடுத்து உபி போலீசார் ட்விட்டர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாகப் பேசிய மத்திய ஐடி அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ட்விட்டரை வெளுத்து வாங்கியிருக்கிறார்.

new IT rules: Don't Indian firms working in the US follow their laws?: RS  Prasad, Telecom News, ET Telecom

அவர், “கருத்து சுதந்திரத்தைத் தாங்கள் தான் தூக்கிப்பிடிப்பதாகக் கூறிக்கொள்ளும் ட்விட்டர் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறிகளைப் பின்பற்ற மறுப்பது ஆச்சரியமளிக்கிறது. மற்ற நிறுவனங்கள் விதிகளுக்கு உடன்பட்டிருக்கும் நிலையில், ட்விட்டர் மட்டும் அடம்பிடிக்கிறது. அதனால் Intermediary அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளது. பல சந்தர்ப்பங்களில் வாய்ப்புகள் கொடுத்தும் அவர்கள் விதிகளுக்கு உடன்படவில்லை” என்று கூறியிருக்கிறார்.