கடும் எதிர்ப்பு… வெங்கையா நாயுடுவின் பக்கத்திற்கு மீண்டும் ப்ளூ டிக் கொடுத்த ட்விட்டர்!

கடும் எதிர்ப்பு… வெங்கையா நாயுடுவின் பக்கத்திற்கு மீண்டும் ப்ளூ டிக் கொடுத்த ட்விட்டர்!

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் ட்விட்டர் கணக்கு ஆக்டிவ் ஆக இல்லாததால் நீக்கப்பட்ட ப்ளூ டிக் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.

கடும் எதிர்ப்பு… வெங்கையா நாயுடுவின் பக்கத்திற்கு மீண்டும் ப்ளூ டிக் கொடுத்த ட்விட்டர்!

இந்திய குடியரசின் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் தனிப்பட்ட ட்விட்டர் பக்கத்தில் இருந்த ப்ளூ டிக்கை இன்று காலை ட்விட்டர் நிறுவனம் நீக்கியது. வெரிஃபைட் என்று சொல்லப்படும் ப்ளூ டிக் கொண்டவர்களின் பக்கங்கள் செயல்பாட்டில் இருக்க வேண்டும். வெங்கையா நாயுடுவின் ட்விட்டர் பக்கம் கடந்த 6 மாதமாக செயல்பாட்டில் இல்லாததால் ப்ளூ டிக் நீக்கப்பட்டதாக துணை ஜனாதிபதியின் அதிகாரி தெரிவித்தார்.

கடும் எதிர்ப்பு… வெங்கையா நாயுடுவின் பக்கத்திற்கு மீண்டும் ப்ளூ டிக் கொடுத்த ட்விட்டர்!

இந்த விவகாரம் சர்ச்சையைக் கிளப்பியது. ட்விட்டர் நிறுவனத்துக்கு எதிராக எதிர்ப்பு குரல்கள் கிளம்பின. இந்த நிலையில், வெங்கையா நாயுடுவின் ட்விட்டர் பக்கத்திற்கு மீண்டும் ப்ளூ டிக்கை ட்விட்டர் நிறுவனம் வழங்கியுள்ளது. நைஜீரியாவிலும் இதுபோன்ற சம்பவம் ஒன்று நடந்தது. அந்நாட்டின் குடியரசு தலைவர் முகமது புகாரியின் ட்விட்டர் பதிவை ட்விட்டர் நிறுவனம் நீக்கிவிட்டது. இதனால், நைஜீரியாவில் ட்விட்டர் சேவை இரண்டு நாட்களுக்கு தடை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.