இனி ட்விட்களுக்கு haha போடலாம்… வருகிறது புதிய ரியாக்சன்கள் – ட்விட்டர்வாசிகளின் ஏக்கம் நிறைவேறுகிறது!

 

இனி ட்விட்களுக்கு haha போடலாம்… வருகிறது புதிய ரியாக்சன்கள் – ட்விட்டர்வாசிகளின் ஏக்கம் நிறைவேறுகிறது!

மக்கள் அனைவரும் கருத்து தெரிவிப்பதற்கும் அரட்டை அடிப்பதற்கும் சமூக வலைதளங்கள் பேருதவியாக இருக்கின்றன. அதில் முதன்மையானது பேஸ்புக்கும் ட்விட்டரும் தான். சமூக வலைதளங்களை இந்த இரு பெரு நிறுவனங்களே ஆக்கிரமித்திருக்கின்றன. அதற்குக் காரணம் அவர்களின் தொடர்ச்சியான அப்டேட் தான். பயனர்களுக்குப் புதுவித அனுபவத்தைக் கொடுப்பதற்காக ஏராளமான அம்சங்களைச் சேர்ப்பார்கள். அந்த வகையில் ட்விட்டர்வாசிகளின் நீண்ட நாளைய ஏக்கம் நிறைவேறப் போகிறது.

இனி ட்விட்களுக்கு haha போடலாம்… வருகிறது புதிய ரியாக்சன்கள் – ட்விட்டர்வாசிகளின் ஏக்கம் நிறைவேறுகிறது!

பேஸ்புக் போல ட்விட்டரும் மிகச்சிறந்த சமூக வலைதளம் தான். நாம் சொல்ல வரும் கருத்தை விரித்து சொல்ல வேண்டுமென்றால் பேஸ்புக்கும், சுருக்கி மூன்றே வரிகளில் சொல்ல வேண்டுமென்றால் ட்விட்டரும் பயன்படுகின்றன. ஆனால் பேஸ்புக்கில் இருக்கும் ஒரேயொரு அம்சம் ட்விட்டரில் இல்லை. அதுதான் ரியாக்சன்ஸ். பேஸ்புக்கில் ஒருவர் போடும் ஸ்டேட்டஸ்களுக்கு நமது மனநிலையைத் தெரியப்படுத்தும் நோக்கில் haha, love, sad,care உள்ளிட்ட ரியாக்சன்களை போட முடியும். அந்தப் பதிவின் தன்மை எப்படி இருக்கிறது என்பதை வரக்கூடிய ரியாக்சன்கள் சொல்லிவிடும்.

இனி ட்விட்களுக்கு haha போடலாம்… வருகிறது புதிய ரியாக்சன்கள் – ட்விட்டர்வாசிகளின் ஏக்கம் நிறைவேறுகிறது!

இந்த மிக முக்கியமான அம்சம் ட்விட்டரில் இதுவரை இல்லை. ட்விட்டரில் பதிவு எப்படி இருந்தாலும் ஹார்ட் மட்டுமே விட முடியும். உங்களுக்கு உவப்பில்லாத கருத்துகளுக்குக் கூட ஒரே ரியாக்சன் தான் போட வேண்டியிருந்தது. இதனால் ட்விட்டர்வாசிகள் நீண்ட வருடங்களாக ரியாக்சன் எமோஜிகளை கொண்டுவர வேண்டும் என ட்விட்டரிடம் கோரிக்கை வைத்திருந்தனர். அவர்களின் நீண்ட கால ஏக்கமாகவும் இருந்தது. தற்போது அதனைப் பூர்த்திசெய்ய ட்விட்டர் வேலை செய்துவருகிறது என கூறப்படுகிறது.

பேஸ்புக்கிலிருந்து தனித்து காட்டும் நோக்கில் cheer, hmm, sad, haha ஆகிய நான்கு ரியாக்சன்களை ட்விட்டர் கொண்டுவரவிருக்கிறது. தற்போது இதுதொடர்பாக ஆய்வு செய்து கொண்டிருக்கிறது. இன்னும் இறுதி முடிவு வெளியாகவில்லை. மேலும் புதிதாக சில எமோஜிகள் சேர்க்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இப்போது இந்தியர்களுக்கு இருக்கும் ஒரே கவலை யாதெனில், எமோஜி வரும் வரைக்காவது ட்விட்டரை மத்திய அரசு தடை செய்யாமல் இருக்க வேண்டும் என்பதே. அதற்கான முடிவு இன்னும் 15 நாட்களுக்குள் தெரிந்துவிடும்.