60 நோயாளிகள் ஆக்சிஜன் இல்லாமல் உயிருக்கு போராட்டம்… மருத்துவமனை அதிர்ச்சி தகவல்!

60 நோயாளிகள் ஆக்சிஜன் இல்லாமல் உயிருக்கு போராட்டம்… மருத்துவமனை அதிர்ச்சி தகவல்!

டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனையில் 24 மணிநேரத்தில் 25 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.

60 நோயாளிகள் ஆக்சிஜன் இல்லாமல் உயிருக்கு போராட்டம்… மருத்துவமனை அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக அதிகரித்து வருகிறது. அத்துடன் இந்தமுறை பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நுரையீரல் பாதிப்பும் அதிகமாக இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் தமிழகம், டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா அதிகரித்து வருகிறது. அத்துடன் இந்த மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு போராடி வரும் நிலையில் ஆக்சிஜனின்றி கொரோனா நோயாளிகள் கொத்து கொத்தாக பலியாகி வருகின்றனர்.

60 நோயாளிகள் ஆக்சிஜன் இல்லாமல் உயிருக்கு போராட்டம்… மருத்துவமனை அதிர்ச்சி தகவல்!

இந்நிலையில் டெல்லி சர் கங்காராம் மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் 25 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 60 நோயாளிகள் செயற்கை சுவாசம் அளிக்கப்படும் சூழலில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்றும் கையிருப்பில் உள்ள ஆக்சிஜன் 2 மணி நேரத்திற்கு மட்டுமே தாக்குபிடிக்கும் என்றும் வெண்டிலேட்டர்கள் சரியாக இயங்கவில்லை என்றும் டெல்லி கங்காராம் மருத்துவமனை இயக்குநர் தெரிவித்துள்ளார்.