தமிழ்நாட்டை ஆங்கிலத்தில் ” Thamizh Naadu ” என்று மாற்றம் செய்ய வேண்டும்- ட்விட்டர் வாசிகள் கருத்து!

தமிழ்நாட்டை ஆங்கிலத்தில் ” Thamizh Naadu ” என்று மாற்றம் செய்ய வேண்டும்- ட்விட்டர் வாசிகள் கருத்து!

தமிழகம் முழுவதும் உள்ள ஊர் பெயர்களை தமிழில் இருப்பது போலவே உச்சரிக்கும் படியும் அதே மாதிரி எழுதவும் நேற்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அந்த மாற்றம் தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இன்னும் சில ஊர்பெயர்கள் முறையாக மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று ட்விட்டர்வாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டை ஆங்கிலத்தில் ” Thamizh Naadu ” என்று மாற்றம் செய்ய வேண்டும்- ட்விட்டர் வாசிகள் கருத்து!

ஒரு ட்விட்டர் வாசி கூறியிருப்பதாவது; கன்னடத்தில் இருக்கும் அள்ளி என்ற பெயரை மாற்றி பட்டி என்று தமிழில் வைக்க பரிந்துரை செய்யப்பட்டும் மீண்டும் அதே போல அள்ளி என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார். மற்றொருவர், தமிழ்நாட்டை ஆங்கிலத்தில் Thamizh Naadu என்று மாற்றம் செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார். தமிழுக்கே உரிய ‘ழ்’ ஐ ஆங்கில வார்த்தையிலும் குறிப்பிட வேண்டும் என்று கருத்துக்கு ட்விட்டர் வாசிகள் பலர் ஒருமித்த கருத்துக்களையே வெளிப்படுத்தியுள்ளனர். இவ்வாறு நெட்டிசன்கள் எழுப்பும் கேள்விகளை பரிசீலித்து ஊர் பெயர்களில் மாற்றம் செய்யப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது.