ஒரே மாசம்தான் 2.52 லட்சம் வாகனங்கள் காலி.. வேகம் எடுத்த டி.வி.எஸ். மோட்டார் வாகனங்கள் விற்பனை..

 

ஒரே மாசம்தான் 2.52 லட்சம் வாகனங்கள் காலி.. வேகம் எடுத்த டி.வி.எஸ். மோட்டார் வாகனங்கள் விற்பனை..

நாட்டின் முன்னணி இரு மற்றும் 3 சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி கடந்த ஜூலை மாதத்தில் மொத்தம் 2.52 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. 2020 ஜூனுடன் ஒப்பிட்டால் கடந்த மாதத்தில் டி.வி.எஸ். மோட்டார் வாகன விற்பனை 27 சதவீதம் அதிகரித்துள்ளது. அந்த மாதத்தில் 1.98 லட்சம் வாகனங்களை மட்டுமே டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி விற்பனை செய்து இருந்தது.

ஒரே மாசம்தான் 2.52 லட்சம் வாகனங்கள் காலி.. வேகம் எடுத்த டி.வி.எஸ். மோட்டார் வாகனங்கள் விற்பனை..

டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி கடந்த மாதம் மொத்தம் 2.43 லட்சம் இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. அந்த மாதத்தில் உள்நாட்டில் மட்டும் அந்நிறுவனம் 1.89 லட்சம் இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி 1.06 லட்சம் மோட்டார் சைக்கிள்களும், 78,603 ஸ்கூட்டர்களும் விற்பனை செய்துள்ளது.

ஒரே மாசம்தான் 2.52 லட்சம் வாகனங்கள் காலி.. வேகம் எடுத்த டி.வி.எஸ். மோட்டார் வாகனங்கள் விற்பனை..

டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் கடந்த ஜூலை மாதத்தில் மொத்தம் 62,389 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது. அதில் 54,141 இரு சக்கர வாகனங்களும் அடங்கும். அந்நிறுவனம் கடந்த மாதம் மொத்தம் 8,956 மூன்று சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது.