6.3 லட்சம் வாகனங்கள் விற்பனை….. டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி லாபம் ரூ.74 கோடியாக குறைந்தது…

6.3 லட்சம் வாகனங்கள் விற்பனை….. டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி லாபம் ரூ.74 கோடியாக குறைந்தது…

நாட்டின் முன்னணி இரு மற்றும் மூன்று சக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி கடந்த மார்ச் காலாண்டில் லாபமாக ரூ.74 கோடி ஈட்டியுள்ளது. இது 2019 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 44.8 சதவீதம் குறைவாகும். அந்த காலாண்டில் ஒரு முறை இழப்பு ஏற்பட்டது மற்றும் வருவாய் குறைந்தது ஆகியவைதான் லாபம் குறைந்ததற்கு முக்கிய காரணம்.

6.3 லட்சம் வாகனங்கள் விற்பனை….. டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி லாபம் ரூ.74 கோடியாக குறைந்தது…

2020 மார்ச் காலாண்டில் டி.வி.எஸ். மோட்டார் கம்பெனியின் செயல்பாட்டு வாயிலான வருவாய் ரூ.3,481.4 கோடியாக இருந்தது. இது 2019 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 20.6 சதவீதம் குறைவாகும். கடந்த மார்ச் காலாண்டில் டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி வரி செலவினம் ரூ.16 கோடியாக குறைந்துள்ளது. 2019 மார்ச் காலாண்டில் இந்நிறுவனத்தின் வரி செலவினம் ரூ.50 கோடியாக இருந்தது.

6.3 லட்சம் வாகனங்கள் விற்பனை….. டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி லாபம் ரூ.74 கோடியாக குறைந்தது…

டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி கடந்த மார்ச் காலாண்டில் மொத்தம் 6.3 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்துள்ளது. இருப்பினும் இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 20.6 சதவீதம் குறைவாகும். டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி அந்த காலாண்டில் பி.எஸ்.4 வாகனங்களை காலி செய்வதற்காக ஒரு முறை தள்ளுபடிக்காக ரூ.22 கோடி வழங்கியது.