டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிகர லாபம் ரூ.319.90 கோடி.. 9.28 லட்சம் வாகனங்கள் விற்பனை

டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிகர லாபம் ரூ.319.90 கோடி.. 9.28 லட்சம் வாகனங்கள் விற்பனை

2021 மார்ச் காலாண்டில் டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.319.90 கோடி ஈட்டியுள்ளது.
நாட்டின் முன்னணி இரு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி தனது கடந்த மார்ச் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2021 மார்ச் காலாண்டில் டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.319.90 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் சுமார் 4 மடங்கு அதிகமாகும். 2020 மார்ச் காலாண்டில் டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிகர லாபமாக ரூ.81.84 கோடி ஈட்டியிருந்தது.

டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிகர லாபம் ரூ.319.90 கோடி.. 9.28 லட்சம் வாகனங்கள் விற்பனை
டி.வி.எஸ். பைக்

2021 மார்ச் காலாண்டில் டி.வி.எஸ். மோட்டார் கம்பெனியின் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.6,131.90 கோடி ஈட்டியுள்ளது. 2020 மார்ச் காலாண்டில் டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.4,104.71 கோடி ஈட்டியிருந்தது. 2021 மார்ச் காலாண்டில் இந்நிறுவனம் மொத்தம் 9.28 லட்சம் இரு மற்றும் மூன்று சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிகர லாபம் ரூ.319.90 கோடி.. 9.28 லட்சம் வாகனங்கள் விற்பனை
டி.வி.எஸ். ஆட்டோ

2020-21ம் நிதியாண்டில் டி.வி.எஸ். மோட்டார் கம்பெனியின் நிகர லாபம் 6.07 சதவீதம் குறைந்து ரூ.607.50 கோடியாக சரிவடைந்துள்ளது. மேலும் இதே காலத்தில் இந்நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் ரூ.19,420.82 கோடியாக அதிகரித்துள்ளது. மொத்தம் 30.52 லட்சம் இரு, மூன்று சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது.