ஊரடங்கு எதிரொலி: வருமானம் இல்லாததால் தூக்கிட்டு தற்கொலை செய்த நடிகை

ஊரடங்கால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக தொலைக்காட்சி நடிகை பிரெக்சா மேத்தா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல இந்தி சின்னத்திரை நடிகை பிரெக்‌சா மேத்தா, மேரி துர்கா, லால் இஷ்க் உள்ளிட்ட இந்தி சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார். 25 வயதான பிரெக்சா, பெண்களுக்கு குறைந்த விலையில் சானிடரி நாப்கினை தயாரித்துக் கொடுத்த, சிறந்த சமூக ஆர்வலரான கோவை அருணாச்சலம் முருகானந்தத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட பேட் மேன் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இவர் மும்பையில் தங்கியிருந்த பிரெக்சா, ஊரடங்கு காரணமாக கடந்த 2 மாதங்களாக அவரது சொந்த ஊரான இந்தூரில் தங்கி இருந்தார். படப்பிடிப்பு இல்லாததால் வருமானமின்றி மன அழுத்தத்தில் இருந்த அவர், தனது படுக்கை அறையில் தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு முன்பு, ‘கனவுகள் மரணிப்பது மிக மோசமான விஷயம்’ என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரேக்சா பதிவிட்டிருக்கிறார். அத்துடன் ஒரு செல்பி புகைப்படத்தையும் பதிவிட்டு அதில் ஹிந்தி பாடல் வரிகளை பதிவிட்டுள்ளார். நடிகை பிரெக்சா தற்கொலை செய்ததற்கான நடிகை குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

- Advertisment -

Most Popular

பெங்களூருவில் மேலும் 12 ஆயிரம் பேருக்கு கொரோனா? – முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கோட்டை விட்ட கர்நாடக அரசு

கொரோனாத் தொற்று குறைவாகவே உள்ளது என்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கர்நாடக அரசு கோட்டைவிட்டதால் தற்போது பெங்களூரு நகரத்தில் மட்டும் 12 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்தியாவில் மும்பை, சென்னை,...

`மனைவி சாப்பாடு கொடுக்கல; அதனால் முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தேன்!;- சிக்கிய கணவர் வாக்குமூலம்

மனைவி சாப்பாடு கொடுக்காததால் அவளை சிக்க வைக்க முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தேன் என்று கைதான வாலிபர் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார். சென்னை கிரீன்வேஸ் பசுமை வழிச்சாலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டில்...

140 கோடி மக்கள் தொகை கொண்ட சீனாவில் கொரோனா பரவாதது எப்படி? – ராமதாஸ் எழுப்பும் சந்தேகம்

இந்தியாவை விட மக்கள் தொகை அதிகம் கொண்ட சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டது எப்படி என்று டாக்டர் ராமதாஸ் வியப்பு தெரிவித்துள்ளார். உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா...

சென்னையில் 52 ஆயிரம் பேர் குணமடைந்துவிட்டனர்; மாநகராட்சியின் பாதிப்பு விவரம் வெளியீடு!

தமிழகத்திலேயே சென்னையில் தான் அதிக அளவு கொரோனா பாதிப்பு பரவியது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா பரவியது தான் இதற்கு முக்கிய காரணம். அதுமட்டுமில்லாமல் கடந்த மாதம் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதாலும் பாதிப்பு...
Open

ttn

Close