‘சுஷாந்த்தை தொடர்ந்து’… உயிரை மாய்த்துக் கொண்ட இளம் டிவி நடிகர்; அதிர்ச்சியில் திரையுலகினர்!

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் சுஷாந்த். இவர் நடித்த தோனி திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று, மக்களின் மனதில் இடம்பெறச் செய்தது. ஆனால் சமீபத்தில் அவர் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டார்.

இவரது மரணம் திரையுலகில் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ரசிகர்களை மீளாத்துயரில் ஆழ்த்தியது. சுஷாந்த்தின் மரணத்தை தொடர்ந்து, கன்னட சீரியல் நடிகரான சுஷில் கவுடா தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2015 ஆம் ஆண்டு முதல் கன்னட தொலைக்காட்சியில் நடித்து வரும் இவருக்கு வயது 36. சுஷிலை காணவில்லை என்று அவரது பெற்றோர்கள் கடந்த 6 ஆம் தேதி காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

இந்த நிலையில், நேற்று மாண்டியாவிலுள்ள அவரது வீட்டில் சுஷில் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்த எந்த விவரமும் இன்னும் வெளியாகவில்லை. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுஷிலின் மரணம் கன்னட தொலைக்காட்சி திரை நட்சத்திரங்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Most Popular

ரூ.1.10 கோடி லஞ்சம் வாங்கிய தாசில்தார் கையும் களவுமாக பிடிபட்டார்!! (வீடியோ)

தெலங்கானாவில் ஒரு கோடியே பத்து லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய தாசில்தாரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்தனர். மல்காஜிரி மாவட்டத்தில் உள்ள கீசாரா மண்டலத்தில், ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றிற்கு...

குடும்பத்தினருடன் உங்கள் 2 ஆவது இன்னிங்சை தொடங்க தோனிக்கு சச்சின் வாழ்த்து!

ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்திருந்தார். அதன்பின் டி20மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டும் தோனி தொடர்ந்து விளையாடி வந்தார். இந்நிலையில் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தோனி...

ஜோ பிடன் அதிபரானால் அமெரிக்கா பாதுகாப்பற்ற நாடாகிவிடும்: அதிபர் ட்ரம்ப்

ஜோபிடன் அதிபரானால் அமெரிக்காவில் எவரும் பாதுகாப்பாக இருக்க முடியாது என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விமர்சனம் செய்துள்ளார். அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குடியரசு...

தடுப்பு மருந்து உற்பத்தியை தொடங்கியது ரஷ்யா!

ரஷ்யா அறிமுகம் செய்த கொரோனா தடுப்பு மருந்தான 'ஸ்புட்னிக் v' இன் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொரோனா தடுப்பு மருந்தினை அறிமுகம் செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் உலக நாடுகளிடையே...
Do NOT follow this link or you will be banned from the site!