மாற்றுத்திறனாளியை தாக்கிய எஸ்.ஐ.க்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் : தூத்துக்குடி எஸ்.பி.க்கு மாற்றுத்திறனாளிகள் நல ஆணையம் நோட்டீஸ்!

மாற்றுத்திறனாளியை தாக்கிய எஸ்.ஐ.க்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் : தூத்துக்குடி எஸ்.பி.க்கு மாற்றுத்திறனாளிகள் நல ஆணையம் நோட்டீஸ்!

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் மாற்றுத்திறனாளியை தாக்கிய புகாரில் தூத்துக்குடி எஸ்.பி. பதிலளிக்க மாற்றுத்திறனாளிகள் நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மாற்றுத்திறனாளியை தாக்கிய எஸ்.ஐ.க்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் : தூத்துக்குடி எஸ்.பி.க்கு மாற்றுத்திறனாளிகள் நல ஆணையம் நோட்டீஸ்!

தமிழகத்தையே உலுக்கியுள்ள சாத்தான்குளம் தந்தை -மகன் கொலை வழக்கில் இதுவரை உதவி ஆய்வாளர் ரகு கணேஷ், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். இருப்பினும் இந்த வழக்கில் தலைமறைவான தலைமை காவலர் முத்து ராஜ் நேற்றிரவு கைது செய்யப்பட்டு தூத்துக்குடி முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி ஹேமா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். சாத்தான்குளம் தந்தை -மகன் கொலை வழக்கில் கைதான முத்து ராஜுக்கு வரும் 17 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் இந்த வழக்கில் இதுவரை 5 காவலர்கள் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

மாற்றுத்திறனாளியை தாக்கிய எஸ்.ஐ.க்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் : தூத்துக்குடி எஸ்.பி.க்கு மாற்றுத்திறனாளிகள் நல ஆணையம் நோட்டீஸ்!

இந்த அதிர்ச்சியில் இருந்து யாரும் இன்னும் கூட மீளவில்லை. ஆனால் அதற்குள் இதே காவலர்கள் மீது மேலும் ஒரு புகார் எழுந்துள்ளது கூடுதல் அதிர்வலையை உண்டாக்கியுள்ளது.

அதாவது மாற்றுத்திறனாளியை எஸ்.ஐ.க்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் தாக்கியதாக டிசம்பர் 3 இயக்கம் புகார் தெரிவித்துள்ளது. அய்யாதுரை என்ற மாற்றுதிறனாளியை எஸ்.ஐ.க்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் தாக்கியுள்ளனர். இதுகுறித்து டிசம்பர் 3 இயக்கம் அளித்த புகாரின் அடிப்படையில், 15 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய தூத்துக்குடி எஸ்பிக்கு மாற்றுத்திறனாளிகள் நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.