தூத்துக்குடியில் ஆதரவற்றோருக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய எஸ்.பி. ஜெயக்குமார்!

 

தூத்துக்குடியில் ஆதரவற்றோருக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய எஸ்.பி. ஜெயக்குமார்!

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆதரவற்றோர் இல்லத்திற்கு, மாவட்ட எஸ்.பி. அத்தியாவசிய பொருட்களை வழங்கி உதவினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தளர்வுகளற்ற பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில் மாவட்ட எஸ்.பி., ஜெயக்குமார் அறிவுறுத்தலின் பேரில், மாவட்டம் முழுவதும் உள்ள போலீசார், தங்களுடைய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டோருக்கு உணவு மற்றும அரிசி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகின்றனர்.

தூத்துக்குடியில் ஆதரவற்றோருக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய எஸ்.பி. ஜெயக்குமார்!

இதன்படி, தூத்துக்குடி கூட்டாம்புளி பகுதியில் செயல்பட்டு வரும் அன்பு உள்ளங்கள் ஆதரவற்றோர் கருணை இல்லத்திற்கு தேவையான அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் நேற்று வழங்கினார். இதேபோல், மாவட்ட காவல்துறை சார்பில் தொடங்கப்பட்ட சேவை மையத்தில் உதவி கோரி வந்த 50 பேருக்கு, எஸ்.பி ஜெயக்குமார் அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்கினார்.

இதேபோல், காயல்பட்டினம் பகுதியில் ஊரடங்கால் வாழ்வாதாரம் இன்றி மூதாட்டி மங்களம் என்பவர் வறுமையில் வாடி வந்தார். இதனையறிந்த ஆறுமுகநேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சதீஷ் நாராயணன் தனது சொந்த செலவில் அரிசி, மளிகை பொருட்களை மூதாட்டி மங்களத்திற்கு வழங்கினார். இதனை பெற்றுகொண்ட அவர், போலீசாருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.