மினி லாரி ஏற்றி எஸ்.ஐ. படுகொலை – குற்றவாளி நீதிமன்றத்தில் சரண்!

 

மினி லாரி ஏற்றி எஸ்.ஐ. படுகொலை – குற்றவாளி நீதிமன்றத்தில் சரண்!

ஏரல் காவல்நிலைய உதவி ஆய்வாளர் பாலு வாகனம் கொல்லப்பட்ட விவகாரத்தில் குற்றவாளி சரணடைந்துள்ளார்.

மினி லாரி ஏற்றி எஸ்.ஐ. படுகொலை – குற்றவாளி நீதிமன்றத்தில் சரண்!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஏரல் காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் பாலு நேற்று படுகொலை செய்யப்பட்டார். இவர் கொற்கையில் ரோந்து பணியில் இருந்த போது முருகவேல் குடித்துவிட்டு சுற்றி திரிந்ததை கண்டித்ததால் இந்த கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது முருகவேல், குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டவாறு சுற்றி திரிந்து வந்துள்ளார். இதை கண்ட எஸ்.ஐ.பாலு முருகவேலை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முருகவேல், அங்கிருந்த சரக்கு வாகனத்தை ஓட்டி வந்து பைக்கில் சென்று கொண்டிருந்த எஸ்.ஐ. பாலு மீது மோதியுள்ளார். இதில் பாலு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். இந்த சம்பவம் காவல்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் இந்த விவாகரத்திற்கு திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.

மினி லாரி ஏற்றி எஸ்.ஐ. படுகொலை – குற்றவாளி நீதிமன்றத்தில் சரண்!

இந்நிலையில் ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலுவை கொன்ற முருகவேல் நீதிமன்றத்தில் சரணடைந்தார். சரக்கு வாகனம் ஏற்றி எஸ்.ஐ. பாலுவை கொலை செய்த முருகவேல் விளாத்திகுளம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.தப்பியோடிய குற்றவாளி முருகவேலை பிடிக்க, 10 தனிப்படை அமைக்கப்பட்டநிலையில் குற்றவாளியே தானாக வந்து சரணடைந்துள்ளார்.