தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கப்பணி எப்போது முடியும்? மத்திய அரசு பதில்!

 

தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கப்பணி எப்போது முடியும்? மத்திய அரசு பதில்!

தூத்துக்குடி விமான நிலையத்தின் விரிவாக்கப்பணி 2022இல் முடியும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி விமான நிலையத்தை ரூ.381 கோடி செலவில் புதுப்பித்து வருவதாக அண்மையில் இந்திய விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்திருந்தது. அதாவது, ஒரே நேரத்தில் 600 பயணிகள் வந்து செல்லும் அளவாக சுமார் 13,350 சதுர மீட்டர் பரப்பளவில் விரிவுப்படுத்த உள்ளதாகவும் தீயணைப்பு நிலையம் மற்றும் விமானங்கள் நிறுத்துமிடம் அமைக்கப்பட உள்ளதாகவும் அறிவித்தது. மேலும், அகலமான ஓடுபாதையும் விமான கட்டுப்பாட்டு கோபுரமும் உள்நாட்டு போக்குவரத்து முனையக்கட்டிடம் ஆகியவை கட்டப்பட உள்ளதாகவும் கூறியிருந்தது.

தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கப்பணி எப்போது முடியும்? மத்திய அரசு பதில்!

இந்த நிலையில், தூத்துக்குடி விமான நிலையத்தில் கட்டுமானப்பணிகள் எப்போது நிறைவடையும் என மத்திய அரசிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த போக்குவரத்துத்துறை அமைச்சகம், தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கப்பணி 2022 ஆம் ஆண்டு மார்ச்சில் நிறைவடையும் என தெரிவித்தது. மேலும், விமானநிலைய ஓடுபாதை விரிவாக்க பணிகளை 2023க்கு பதில் 2022ல் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டது.