பூச்சிக் கொல்லிகளைக் ‘கொலை’ செய்யும் மஞ்சள் பொடி

 

பூச்சிக் கொல்லிகளைக் ‘கொலை’ செய்யும் மஞ்சள் பொடி


நாம் உண்ணும் உணவு வகைகள் எல்லாமே ஆரோக்கியமானதுதானா? என்று கேட்டால் ‘ஆம்’ என்று சொல்ல முடியாது.மசாலாப் பொருட்களில் கலப்படம் இருக்கிறது என்றால் காய்கறி, பழங்கள், கீரைகள் எல்லாமே பூச்சி கொல்லி மருந்துகளைத் தெளித்துதான் உற்பத்தி செய்யப்படுகின்றன.

பூச்சிக் கொல்லிகளைக் ‘கொலை’ செய்யும் மஞ்சள் பொடி

விளைச்சலுக்கு முன்னதாகவே இவற்றில் பூச்சி மருந்துகள் தெளிக்கப்படுவதால் காய்கறிகள். பழங்கள். கீரைகளில் பூச்சிக் கொல்லி மருந்துகளும் ஒரு வகைச் சத்தாக ஒட்டிக் கொள்கின்றன.மருந்துகளாக மட்டுமல்லாமல் உரங்களாகவும் சில பூச்சி கொல்லி மருந்துகள் பயன் படுத்தப்படுகின்றன.
காய்கறிகள். பழங்கள் ,கீரைகள் ஆகியவை நமக்கு ஆரோக்கியமான உணவுகள்தான் என்றாலும், அதன் விளைச்சலின் போது கலக்கப்படும் வேதிப் பொருட்களால் நாளடைவில் வயிறு சம்பந்தமான பிரச்சனைகள், மலட்டுத்தன்மை,தோல் நோய்கள் ஆகியவை வருவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.

பூச்சிக் கொல்லிகளைக் ‘கொலை’ செய்யும் மஞ்சள் பொடி

பொதுவாக பூச்சிக் கொல்லி மருந்துகளின் படிவங்கள் பழங்கள். காய்கறிகளின் மேல் தோல் பகுதியில் படிகின்றன.எனவே காய்கறிகளையோ அல்லது பழங்களையோ அல்லது கீரை வகைகளையோ நாம் நன்றாக கழுவி விட்டுத்தான் உபயோகிக்க வேண்டும். கழுவும் பொழுது சிறிது மஞ்சள் பொடி கலந்த நீரில் கழுவினால் இத்தகைய பூச்சிக் கொல்லி கிருமிகளின் படிவங்கள் அழிந்து போகும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஆகவே காய்கறிகள். மற்றும் பழங்களை மஞ்சள் தண்ணீரில் கழுவும் பழக்கத்தை கடைப்பிடியுங்கள். குழந்தைகள் மட்டுமல்ல, குடும்பத்தின் எதிர்காலமும் ஆரோக்கியமாக அமையும்