துருக்கி பயங்கர நிலநடுக்கம்: கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News
  • February
    20
    Thursday

Main Area

Mainதுருக்கி பயங்கர நிலநடுக்கம்: கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

turkey
turkey

இஸ்தான்புல்: துருக்கியில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கடந்த 24-ஆம்தேதி இரவு துருக்கியின் கிழக்குப் பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கியின் தலைநகரமான அங்காராவில் இருந்து சுமார் 750 கி.மீ தொலைவில், எலாஜிக் மாகாணம் சிவிரைஸ் நகரை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் உருவானது. மேலும் ரிக்டர் அளவுகோலில் 6.8 அலகாக நிலநடுக்கம் பதிவானது. இதன் தாக்கம் அருகில் உள்ள 4 மாகாணங்களிலும் நன்றாக உணரப்பட்டது.

turkey

இந்த பயங்கர நிலநடுக்கத்தால் எலாஜிக் மற்றும் மலாத்யா மாகாணங்களில் வீடுகள், கடைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இதனால் அந்த கட்டிடங்களில் வீடுகளில் வசித்த மக்கள் இடிபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடினர். எஞ்சியிருந்தவர்கள் தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து தேசிய மீட்புக் குழுவினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலநடுக்கத்தால் கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 29-ஆக அதிகரித்துள்ளது. ஆனால் மேலும் பலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை உயரக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகள் முழுவேகத்தோடு நடந்து வருகிறது. இந்த நிலநடுக்கத்தால் 1100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும் ஏராளமான பொருள் இழப்பு ஏற்பட்டிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.