விளைநிலங்களில் குழாய் பதிக்கும் பணி- நெற்பயிர் சேதம் !

விளைநிலங்களில் குழாய் பதிக்கும் பணி- நெற்பயிர் சேதம் !

திருச்சி

விளை நிலங்களில் எரிவாயு குழாய் அமைக்கும் பணிகள் காரணமாக நெற்பயிற்கள் சேதம் அடைந்து வருவதால் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

விளைநிலங்களில் குழாய் பதிக்கும் பணி- நெற்பயிர் சேதம் !

சென்னை, எண்ணூர் முதல் தூத்துக்குடி வரை குழாய் மூலம் எரிவாயு கொண்டு செல்லும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதற்காக சில குறிப்பிட்ட வழித்தடங்களில் அமைந்திருக்கும் விவசாய நிலங்கள், நீர் ஓடைகள், ஏரிகள், விவசாய நிலங்கள் வழியாக குழாய் அமைக்கப்படுகின்றன.

விளைநிலங்களில் குழாய் பதிக்கும் பணி- நெற்பயிர் சேதம் !
விளைநிலங்களில் குழாய் பதிக்கும் பணி- நெற்பயிர் சேதம் !

அந்த வகையில், திருச்சி மாவட்டத்தில் எரிவாயு கொண்டு செல்லும் பணிக்காக விவசாய நிலங்களில் சுமார் 6 அடி அகலத்திற்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் சார்பில் குழி தோண்டப்படுகின்றன. இதனால் அங்கு பயிரிடப்பட்டிருந்த நெல் பயிர்கள் சேதம் அடைவதால், அப்பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அங்கு வந்த ஐஓசி அதிகாரிகள் ஏற்கனவே இங்கு குழாய் பதிக்கப்பட்டு பெட்ரோல் கொண்டுசெல்லப்படுகிறது. தற்போது எரிவாயு கொண்டு செல்வதற்காக குழாய் பதிக்கும் பணிக்காக குழி தோண்டப்படுகிறது. எனவே தற்போது சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு தரப்படும் என உறுதி அளித்தனர். இதனையடுத்து விவசாயிகள் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.

விளைநிலங்களில் குழாய் பதிக்கும் பணி- நெற்பயிர் சேதம் !