ஓபிஎஸ்ஸா? தங்க தமிழ்ச்செல்வனா? – யாருக்கு செக் வைக்கிறார் டிடிவி தினகரன்!

ஓபிஎஸ்ஸா? தங்க தமிழ்ச்செல்வனா? – யாருக்கு செக் வைக்கிறார் டிடிவி தினகரன்!

அரசியலிலிருந்து சசிகலா பின்வாங்கி இருந்தாலும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேர்தல் போட்டியிடப் போவதாக ஒற்றைக் காலில் நிற்கிறார். யாரும் கூட்டணிக்கு வந்தால் சேர்த்துக்கொள்வோம்; இல்லையேல் தனித்துப் போட்டியிடுவோம் என்ற தீர்க்கமான முடிவில் அவர் இருக்கிறார். அதற்குண்டான வேலைகளிலும் அவர் இறங்கிவிட்டார். கட்சி சார்பில் 234 தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு பெறப்பட்டுவருகிறது.

ஓபிஎஸ்ஸா? தங்க தமிழ்ச்செல்வனா? – யாருக்கு செக் வைக்கிறார் டிடிவி தினகரன்!

அதேசமயம் பிரச்சாரங்களிலோ போஸ்டர்களிலோ சசிகலாவின் பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தக் கூடாது என்றும் கட்டளையிடப்பட்டுள்ளது. இச்சூழலில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தினகரன் சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். அப்போது பேசிய அவர், தான் இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடப் போவதாகக் கூறியுள்ளார். உத்தேசமாக அவர் ஏற்கெனவே வெற்றிபெற்ற ஆர்கே நகர் தொகுதியிலும் தேனியில் ஒரு தொகுதியிலும் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.

ஓபிஎஸ்ஸா? தங்க தமிழ்ச்செல்வனா? – யாருக்கு செக் வைக்கிறார் டிடிவி தினகரன்!

தேனியைப் பொறுத்தவரை மூன்று தொகுதிகள் முக்கியமானவையாகப் பார்க்கப்படுகின்றன. அதிமுகவின் கோட்டையாகவும், தங்க தமிழ்ச்செல்வனின் செல்வாக்கு மிகுந்த தொகுதியாகவும் ஆண்டிப்பட்டி இருக்கிறது. இதையடுத்து ஓபிஎஸ்ஸின் ஆஸ்தான தொகுதியான போடிநாயக்கனூர் இருக்கிறது.

ஓபிஎஸ்ஸா? தங்க தமிழ்ச்செல்வனா? – யாருக்கு செக் வைக்கிறார் டிடிவி தினகரன்!

கம்பம் தொகுதியும் இம்முறை முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. அங்கு ஓபிஎஸ்ஸின் இளைய மகன் ஜெயபிரதீப் போட்டியிட ஏராளமான விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மூன்று தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் தினகரன் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதேபோல தினகரன் எம்பியாக வெற்றிபெற்ற பெரியகுளம் தற்போது தனித்தொகுதியாக மாற்றப்பட்டுள்ளது.