#kovilpatti சுழன்று அடிக்கும் டிடிவி அலை… அடுத்த ஆர்கே நகர் ஆகிறதா கோவில்பட்டி?

 

#kovilpatti சுழன்று அடிக்கும் டிடிவி அலை… அடுத்த ஆர்கே நகர் ஆகிறதா கோவில்பட்டி?

கொளத்தூர், எடப்பாடி வரிசையில் கோவில்பட்டி தொகுதியும் இம்முறை கவனம் பெறுகிறது. காரணத்தைச் சொல்லி தெரிய வேண்டியதில்லை. ஆர்கே நகரில் சுயேச்சையாக நின்று பேரியக்கமான திமுகவையே டெபாசிட் இழக்கச் செய்தவர், இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி தான் ஜெயிக்கும் என்ற எழுதப்படாத விதியை மாற்றியெழுதியவர் என பல பெருமைகளுக்குச் சொந்தக்காரர் ஆனார் டிடிவி தினகரன். அவர் தற்போது தேர்ந்தெடுத்திருக்கும் தொகுதி கோவில்பட்டி. அதனால் நட்சத்திர அந்தஸ்து பெற்றிருக்கிறது.

#kovilpatti சுழன்று அடிக்கும் டிடிவி அலை… அடுத்த ஆர்கே நகர் ஆகிறதா கோவில்பட்டி?

அதிமுக சார்பில் கடம்பூர் ராஜூ தொடர்ந்து மூன்றாவது முறையாகப் போட்டியிடுகிறார். ஏற்கெனவே இரண்டு முறை வெற்றிபெற்ற அவர், ஹாட்ரிக் வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அந்த வெற்றி அவ்வளவு சுலபமில்லை என்பதையே கள நிலவரங்கள் உணர்த்துகின்றன. திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி சார்பில் சீனிவாசன் நிற்கிறார். இது ஒரு காலத்தில் கம்யுனிஸ்ட்களின் கோட்டையாக இருந்திருக்கிறது. 1952ஆம் ஆண்டு முதல் இதுவரை 15 தேர்தல்களைச் சந்தித்துள்ளது. இதில் 7 முறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வென்றுள்ளது. அடுத்ததாக அதிமுக 4 முறையும், காங்கிரஸ் 3 முறையும், சுயேச்சை 1 முறையும் வென்றுள்ளன.

#kovilpatti சுழன்று அடிக்கும் டிடிவி அலை… அடுத்த ஆர்கே நகர் ஆகிறதா கோவில்பட்டி?

ஒரு முதல்வர் வேட்பாளர் களத்தில் நிற்கிறார் என்ற ஆவலுடன் மக்களின் கருத்துக்களை அறிய நமது டாப் தமிழ் நியூஸ் குழு மைக்கை நீட்டியது. நீட்டியது முதலே டிடிவி, டிடிவி என்றே பதில்கள் வந்தன. சொற்பமாகவே அமைச்சரின் பெயர் அடிபட்டது. சீமான், கமல் ஆகியோர் ஆட்டத்திலேயே இல்லை. கோவில்பட்டி தொகுதியில் மும்முனை போட்டி உறுதியாகியிருக்கிறது.

#kovilpatti சுழன்று அடிக்கும் டிடிவி அலை… அடுத்த ஆர்கே நகர் ஆகிறதா கோவில்பட்டி?

அமைச்சர் கடம்பூர் ராஜூ மீது தொகுதி மக்களிடையே அபிப்ராயம் இருப்பதாகத் தெரியவில்லை. இவர்கள் இருவருக்கும் இருக்கும் மோதலில் மார்க்சிஸ்ட் ஜெயித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மூவரில் டிடிவி தினகரனே உயர்ந்து நிற்கிறார். கருத்துக்கணிப்பு முடிவில் பெரும்பான்மையான மக்கள் டிடிவி தினகரனையே டிக் அடித்திருக்கிறார்கள். கருத்துக்கணிப்பை விவரமாகக் காண வீடியோவில் பாருங்கள்.