வேடந்தாங்கலை சிதைக்க முனைவது கண்டனத்திற்குரியது – டிடிவி தினகரன்

 

வேடந்தாங்கலை சிதைக்க முனைவது கண்டனத்திற்குரியது – டிடிவி தினகரன்

உலக அளவில் தமிழகத்திற்குப் புகழ் சேர்ப்பது, வேடந்தாங்கல் பறவைகள் புகலிடம். 30 ஹெக்டேர் பரப்பில் அமைந்து இருக்கின்றது. புவியின் வடக்கு முனையை ஒட்டி இருக்கின்ற சைபீரியக் கடுங்குளிரில் வாழுகின்ற பறவைகளும், வறண்ட நிலமான ஆஸ்திரேலியாவில் இருந்தும், சுமார் 5,000 முதல் 10 ஆயிரம் கிலோமீட்டர்கள் பறந்து வருகின்றன. இங்கே தங்கி, இனப்பெருக்கம் செய்கின்றன.

வேடந்தாங்கலை சிதைக்க முனைவது கண்டனத்திற்குரியது – டிடிவி தினகரன்

தொழில் துறை சார்ந்த உரிமங்களை வழங்க சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட வேடந்தாங்கல் பறவைகள் வாழிடப் பகுதியை, 3 கிலோ மீட்டர் என்கிற அளவிற்குச் சுருக்குவதற்கு ஒப்புதல் அளிக்கக் கோரி, தேசிய காடுகள் உயிரியல் வாரியத்திடம், தமிழக அரசு கோரிக்கை விடுத்து இருக்கின்றது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

வேடந்தாங்கலை சிதைக்க முனைவது கண்டனத்திற்குரியது – டிடிவி தினகரன்

இந்நிலையில் இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது டிவிட்டர் பக்கத்தில், “வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய நிலத்தைச் சுருக்கி கட்டுமானங்களைச் செய்வதற்கு தமிழக அரசு முயற்சிப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.உலகம் முழுக்க சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பல்லுயிர் பெருக்க மண்டலங்கள் உருவாக்கப்பட்டு வரும் நிலையில், அப்படிப்பட்ட இடமான வேடந்தாங்கலை சிதைக்க முனைவது கண்டனத்திற்குரியது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு மத்திய அரசு அனுமதியளிக்கக் கூடாது” என்று பதிவிட்டுள்ளார்.