‘நீட் தேர்வு அச்சம் இன்னோர் உயிரைப் பலி வாங்கியிருக்கிறது’: டிடிவி தினகரன் பதிவு!

‘நீட் தேர்வு அச்சம் இன்னோர்  உயிரைப்  பலி வாங்கியிருக்கிறது’: டிடிவி தினகரன் பதிவு!

நீட் தேர்வால் மதுரையில் மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பல எதிர்ப்புகளுக்கிடையே நாளை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற உள்ளது. இதனை ஒத்திவைக்குமாறு பலர் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், நீட் தேர்வு ஒத்திவைக்கப்படாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. இந்த தேர்வை எதிர்கொள்ள முடியாத தமிழக மாணவர்கள் பலர் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது.

‘நீட் தேர்வு அச்சம் இன்னோர்  உயிரைப்  பலி வாங்கியிருக்கிறது’: டிடிவி தினகரன் பதிவு!

நேற்று முன்தினம் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் விக்னேஷ் கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டதை தொடர்ந்து, இன்று காலை மதுரையை சேர்ந்த மாணவி ஜோதி துர்கா தற்கொலை செய்து கொண்டார். இவ்வாறு மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வை நடத்தியே தீருவோம் என அடம்பிடிக்கும் மத்திய அரசுக்கு, தமிழக அரசியல் தலைவர்கள் பலர் தனது கண்டனக் குரலை எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் மாணவி ஜோதி துர்கா தற்கொலை குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

‘நீட் தேர்வு அச்சம் இன்னோர்  உயிரைப்  பலி வாங்கியிருக்கிறது’: டிடிவி தினகரன் பதிவு!

அந்த பதிவில், “நீட் தேர்வு அச்சம் இன்னோர் உயிரைப் பலி வாங்கியிருக்கிறது. மதுரை மாணவி ஜோதிஸ்ரீ துர்காவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் நெஞ்சம் விம்முகிறது. இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த துயரம் தொடருமோ?” என குறிப்பிட்டுள்ளார்.