‘நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி விபத்து அதிர்ச்சியளிக்கிறது’ – டிடிவி தினகரன் பதிவு!

 

‘நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி விபத்து அதிர்ச்சியளிக்கிறது’ – டிடிவி தினகரன் பதிவு!

நாமக்கல்லில் புதிய அரசு மருத்துவ கல்லூரி கட்டடம் இடிந்தது அதிர்ச்சி அளிப்பதாக டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் ரூ.336 கோடி செலவில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. தேர்தலுக்குள் கட்டுமான பணியை முடித்து விட வேண்டும் என பணிகள் தீவிரமடைந்து வரும் நிலையில், கல்லூரியின் முகப்பு மண்டபம் (போர்ட்டிகோ) நேற்று திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் கட்டட தொழிலார்கள் சிலர் காயம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்துக்கு பலரும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

‘நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி விபத்து அதிர்ச்சியளிக்கிறது’ – டிடிவி தினகரன் பதிவு!

இந்த நிலையில் இது குறித்து டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமானப் பணிகளின்போதே புதிதாக கட்டப்பட்ட தூண் உள்ளிட்டவை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதாகவும், அதில் 5 தொழிலாளர்கள் காயமடைந்ததாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

‘நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி விபத்து அதிர்ச்சியளிக்கிறது’ – டிடிவி தினகரன் பதிவு!

ஆனால், அந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் விபத்து நடைபெறவில்லையென்றும், அதிகாரிகள்தான் அதனை இடித்து தள்ளினார்கள் என்றும் கூறியிருக்கிறார். அப்படியானால் விபத்து நடந்ததாக தகவல் வெளியானதும், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் அவசர, அவசரமாக அங்கு சென்று பார்வையிட்டது ஏன்?

தரமற்ற பொருட்களை பயன்படுத்தி பணிகளை மேற்கொள்ளப்படுவதால் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் புதிய கட்டுமானம் இடிந்து விழுந்ததா? இல்லை, திட்டமிடாமல் பணிகளை செய்ததால் இடித்து தள்ளப்பட்டதா? என்ற மக்களின் சந்தேகங்களுக்கு பழனிசாமி அரசு உரிய விளக்கமளிக்க வேண்டும். மக்களின் வரிப்பணத்தில் செய்யப்படும் கட்டுமானத்தில் நிகழும் இத்தகைய தவறுகளுக்கு மிகப்பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் என்பதை ஆட்சியாளர்கள் மறந்துவிடக்கூடாது. ” என குறிப்பிட்டுள்ளார்.