சசிகலா தலைமையில் தினகரன் மகள் திருமணம்! ஏற்பாடுகள் தீவிரம்…

 

சசிகலா தலைமையில் தினகரன் மகள் திருமணம்! ஏற்பாடுகள் தீவிரம்…

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த நான்கு வருடங்களாக இருக்கிறார் சசிகலா. இவ்வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த ஜெயலலிதா காலமாகியதால், மற்ற 3 பேரும் சிறை தண்டனை அனுபவிக்கும் வகையில் 2017 பிப்ரவரி 15ம் தேதி முதல் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளனர். இந்த 3 பேரின் தண்டனை காலம் அடுத்தாண்டு முடியும் நிலையில், முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவார்கள் என்று தகவல் வெளியாகியது. அதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி விடுதலை ஆவதாக தகவல் வெளிவந்தது. பின்னர் ஆகஸ்ட் 28ம் தேதி விடுதலை ஆவதாக தகவல் வந்தது. உண்மையில் , சசிகலாவுக்கான 10 கோடி ரூபாய் அபராத தொகையினை இன்னமும் கட்டாமல் இருப்பதாகவும், அதைக் கட்டி முடித்தவுடன் தான் சசிகலாவின் விடுதலை குறித்து சிறைத்துறை அறிவிக்கும் என்றும் தகவல்கள் வெளியானது.

சசிகலா தலைமையில் தினகரன் மகள் திருமணம்! ஏற்பாடுகள் தீவிரம்…

இதனிடையே அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் மகள் ஜெயஹரிணிக்கும், காங்கிரஸ் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவரான கிருஷ்ணசாமி வாண்டையார் மகன் ராமநாதன் துளசிக்கும் திருமணம் செய்வதற்காக சில மாதங்களுக்கு முன்பு இரு குடும்பத்தினர் தரப்பிலும் பேசி முடிவு செய்திருந்தனர். வரும் 11 ஆம் தேதி சுவாமிமலையில் இவர்களது நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளது. இந்த தகவலை சசிகலாவிடம் தினகரன் தெரிவித்துவிட்டார். இந்நிலையில், மகள் திருமணத்தை சசிகலா முன்னிலையில் நடத்த தினகரன் திட்டமிட்டுள்ளார். சசிகலா சிறையிலிருந்து விரைவில் விடுதலையாவார் என எதிர்பார்க்கப்படுவதால் அந்த அறிவிப்பு வந்த பின்னரே திருமண தேதி முடிவு செய்யப்பட்டு பத்திரிக்கை அடிக்கப்படவுள்ளன.