“எப்படியும் ஜெயிக்க போறதில்லனு பழனிசாமி அடிச்சி விடுறாருங்க” – டிடிவி தினகரன் நக்கல்

 

“எப்படியும் ஜெயிக்க போறதில்லனு பழனிசாமி அடிச்சி விடுறாருங்க” – டிடிவி தினகரன் நக்கல்

நான் எப்போதும் மாங்காய் புளித்ததா, வாய் புளித்ததா என்று பேச மாட்டார் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஏற்கெனவே கூறியுள்ளார். அதிமுக செய்யும் நல்லதையும் பேசுவேன்; கெட்டதையும் விமர்சிப்பேன் என இதற்கு விளக்கமும் கொடுத்துள்ளார். சசிகலா கைவிட்டதும் அதிமுகவை முழுவதுமாக எதிர்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். நான்காவது அணியைத் தோற்றுவித்து முதலமைச்சர் ரேஸில் அவரும் இருப்பதாக நேற்று சிக்னல் விட்டார்.

“எப்படியும் ஜெயிக்க போறதில்லனு பழனிசாமி அடிச்சி விடுறாருங்க” – டிடிவி தினகரன் நக்கல்

இது ஒருபுறமிக்க மக்கள் நீதி மய்யம், திமுக, அதிமுக என மூன்று கட்சிகளின் தேர்தல் வாக்குறுதி காட்சிகள் தான் இப்போதையை ஹைலைட். முக்கியமாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,500 ரூபாய் உதவித்தொகை வழங்குவதாகவும், வருடத்திற்கு 6 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக அளிக்கப்போவதாகவும் தேர்தல் வாக்குறுதி கொடுத்தார்.

“எப்படியும் ஜெயிக்க போறதில்லனு பழனிசாமி அடிச்சி விடுறாருங்க” – டிடிவி தினகரன் நக்கல்

தற்போது இதை தினகரன் விமர்சனம் செய்திருக்கிறார். இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய அவர், “முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பு மக்களை ஏமாற்றும் செயல். எப்படியும் தேர்தலில் வெற்றி பெறமாட்டோம் என்று தெரிந்து பழனிசாமி பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். கேஸ் விலையைக் குறைக்காத முடியாதவர் இன்று இலவச சிலிண்டர் வழங்குவதாக அறிவித்துள்ளார். இது தேர்தலுக்கான வாக்குறுதி மட்டுமே” என்றார்