பிரச்சாரத்தில் வேட்பாளர் ஆப்சென்ட்… கடுப்பில் அதிமுக, திமுகவை திட்டிய டிடிவி!

 

பிரச்சாரத்தில் வேட்பாளர் ஆப்சென்ட்… கடுப்பில் அதிமுக, திமுகவை திட்டிய டிடிவி!

தேர்தலுக்கு இன்னும் சிறிது நாட்களே இருப்பதால் அரசியல் கட்சிகள் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர். கால அவகாசம் இல்லாததால் ஒரு கட்சி சார்பில் முக்கிய தலைவர் பிரச்சாரம் செய்யும்போது அம்மாவட்டத்திலுள்ள அனைத்து வேட்பாளர்களும் ஒரே இடத்தில் ஆஜராக கட்சிகள் உத்தரவிட்டிருக்கின்றன. திமுக தலைவர் ஸ்டாலின் இந்த முறையிலும் பிரச்சாரக் கூட்டம் நடத்திவருகிறார். அந்த வகையில் நேற்று நாமக்கல் மாவட்டத்தில் அமமுக முதல்வர் வேட்பாளர் டிடிவி தினகரன் பிரச்சாரம் மேற்கொள்ள சென்றார்.

பிரச்சாரத்தில் வேட்பாளர் ஆப்சென்ட்… கடுப்பில் அதிமுக, திமுகவை திட்டிய டிடிவி!

பிரச்சார பொதுக்கூட்டம் பரமத்தியில் நடப்பதாக இருந்தது. அந்த மாவட்டத்தில் மொத்தம் 6 வேட்பாளர்கள். அவர்களில் ஐவர் ஆஜராக திருச்செங்கோடு தொகுதி வேட்பாளர் ஹேமலதா மட்டும் ஆப்சென்ட் ஆகியுள்ளார். இதனால் செம டென்சனாகியுள்ளார் டிடிவி தினகரன். இருப்பினும், மக்களிடம் காட்டிக்கொள்ளாமல் தனது டிரேட் மார்க் சிரிப்புடன் பிரச்சாரம் மேற்கொண்டிருக்கிறார்.

பிரச்சாரத்தில் வேட்பாளர் ஆப்சென்ட்… கடுப்பில் அதிமுக, திமுகவை திட்டிய டிடிவி!

பிரச்சாரத்தில் பேசிய அவர், “தமிழகத்தில் நீர் நிலைகளை தூர் அள்ளினார்களோ இல்லையோ தமிழக அரசு கஜானாவை முதல்வர் பழனிசாமி அரசு தூர்வாரி விட்டது. லாக்டவுன் காலத்தில் எந்தப் பணியும் நடைபெறவில்லை. ஆனால், அந்த காலக்கட்டத்தில் ரூ.1 லட்சம் கோடி கடன் என துணை முதல்வர் தெரிவிக்கிறார். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு கஜானாவை காலி செய்து சானிடைசர் அடித்து மூடி வைத்துள்ளது. இன்னொரு பக்கம் தொடர்ந்து பத்து ஆண்டுகளாக ஆட்சிக்கு வர முடியவில்லை என திமுக தவியாய் தவித்து வருகிறது. ஒருவேளை திமுக ஆட்சிக்கு வந்து கஜானாவை பார்த்து காலியாக இருந்தால் பொதுமக்கள் சொத்து, உடமைகள் சூறையாடப்படும்” என்றார்.