தூத்துக்குடியில் ஒரு ஜாலியன் வாலாபாக் படுகொலை- டிடிவி தினகரன்

 

தூத்துக்குடியில் ஒரு ஜாலியன் வாலாபாக் படுகொலை- டிடிவி தினகரன்

தூத்துக்குடி குரூஸ் பர்னாந்த் சிலை அருகில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் சந்திரனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய டிடிவி தினகரன், “தூத்துக்குடியில் சுற்றுச்சூழலை பாதிக்ககூடிய எந்த ஒரு புதிய ஆலையையும் அனுமதிக்கவிடமாட்டோம். தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு காரணமானவர்கள் மே 2-க்கு பிறகு நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள். தமிழ்நாட்டில் தற்போது துப்பாக்கிச்சூடு ஆட்சிதான் நடக்கிறது. ஜாலியன் வாலாபாக் சம்பவம் போன்று தூத்துக்குடியில் நடந்த சம்பவத்தை அவ்வளவு எளிதில் மறந்துவிடமாட்டார்கள். ஏரி குளங்களை தூர்வாரமல் அரசு கஜானாவை தூர்வாரிவிட்டார் ஈபிஎஸ். ஆளுங்கட்சியினர் தங்களை காப்பாற்றிக்கொள்ளவே மத்திய அரசுடன் இணக்கமாக உள்ளனர்.

தூத்துக்குடியில் ஒரு ஜாலியன் வாலாபாக் படுகொலை- டிடிவி தினகரன்

தூத்துக்குடியில் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்றுவோம். தூத்துக்குடி தொகுதியில் நச்சு ஆலைகள் இருந்தால் அவற்றை அகற்றப் போராடுவோம். திமுக ஆட்சிக்கு வந்தால் மக்கள் வரிப்பணத்தை சுரண்டி விடுவார்கள். சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிடும். மீனவர்களுக்கு இலவச மீன் குளிர்சாதன பதப்படுத்தும் கூடம் அமைத்துதரப்படும் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளோம். தமிழ்நாட்டில் தீயசக்தி திமுக தலையெடுக்க விடாமல் செய்யவேண்டும். உப்பள தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்” எனக் கூறினார்.