டெல்லியில் விவசாயிகள் மீது தாக்குதல் : டிடிவி தினகரன் கண்டனம்!

 

டெல்லியில் விவசாயிகள் மீது தாக்குதல் : டிடிவி தினகரன் கண்டனம்!

டெல்லியில் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், “டெல்லியில் விவசாயிகள் மீதான காவல்துறையினரின் நடவடிக்கைகள் கண்டனத்துக்குரியவை. நாட்டின் குடியரசு தினத்தில் இத்தகைய சம்பவங்கள் நடைபெறுவது மிகுந்த வருத்தமளிக்கிறது #DelhiFarmers. விவசாயிகளின் பிரச்னைக்கு அமைதிவழியில் தீர்வு காண்பதற்கான முயற்சிகளில் மத்தியஅரசு ஈடுபட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

டெல்லியில் விவசாயிகள் மீது தாக்குதல் : டிடிவி தினகரன் கண்டனம்!

வேளாண் சட்டங்களையும் மத்திய அரசின் மெத்தன போக்கையும் கண்டித்து டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தப்பட்டது. அனுமதி அளிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னரே பேரணியை தொடங்கியதாக குற்றஞ்சாட்டிய டெல்லி போலீசார், விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியதோடு தடியடியும் நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் செங்கோட்டையை முற்றுகையிட்டனர். அதோடு, டெல்லி காவல்துறை தலைமையகத்தையும் முற்றுகையிட்டனர். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

நவம்பர் மாதத்தில் இருந்து விவசாயிகள் போராடி வருவதை கண்டுக் கொள்ளாத அரசு, இன்று குடியரசு தின விழாவின் போது விவசாயிகள் டெல்லிக்குள் நுழைந்ததால் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியது கண்டனத்திற்குரியது என அரசியல் தலைவர்கள் பலர் கண்டனக் குரலெழுப்புகின்றனர். அந்த வகையில், தற்போது டிடிவி தினகரனும் இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.