காவலர்களை போன்று முதல்வரும் மன அழுத்தத்தில் இருக்கிறாரா? – டிடிவி தினகரன்

சாத்தான்குளம் சம்பவத்தில் கொலை வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது என அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள டிடிவி தினகரன், மாஜிஸ்திரேட்டையே தரக்குறைவாக பேசி மிரட்டும் துணிச்சலை காவல்துறைக்கு கொடுத்தது யார் என்பதை பழனிசாமி அரசு விளக்க வேண்டும். மாஜிஸ்திரேட்டிடம் மரியாதைக்குறைவாக நடந்து கொண்ட காவலருக்கு மன அழுத்தம் இருப்பதாக அரசு சொன்னதைப் போல, அந்தத்துறையின் அமைச்சரான முதல்வரும் மன அழுத்தத்தில் இருக்கிறாரா?. சாத்தான்குளம் சம்பவத்தில் கொலை வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. நீதிபதிகள் அச்சம் தெரிவித்திருப்பதைப் போன்று தலைமைக்காவலர் ரேவதியின் வாக்குமூலத்தை காவல்துறையினர் அழிக்கவோ, மாற்றவோ இடம் கொடுக்காமல் இருப்பதற்கு முதலமைச்சர் பழனிசாமி உத்தரவாதம் அளிக்கவேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisment -

Most Popular

தமிழகத்தில் இன்று மேலும் 3,827 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 1,14,978 ஆக உயர்வு!!

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் ஒரு கோடியே 15 லட்சத்து 90ஆயிரத்து 635ஆக அதிகரித்துள்ளது. 5 லட்சத்து 37ஆயிரத்து 436 பேரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை...

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட புதுக்கோட்டை சிறுமியின் குடும்பத்திற்கு விஜய் மக்கள் மன்றத்தினர் ரூ.50000 நிதியுதவி

அறந்தாங்கி அருகே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட 7 வயது சிறுமியின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து ரூபாய் 50 ஆயிரம் மாவட்ட தளபதி விஜய் மக்கள் மன்றம் சார்பாக வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம்...

பாலியல் தொழிலாளர்களை பாடாய் படுத்தும் கொரானா-கஸ்டமர் வராததால் பெரும் கஷ்டத்தில் வாடும் நிலை ..

கொரானாவால் எந்த தொழிலையும் மாஸ்க் போட்டுகொண்டு,ம் சமூக இடைவெளியுடனும் செய்யலாம் .ஆனால் பாலியல் தொழிலை அப்படி நடத்த முடியுமா ?முடியாது ,அதனால் அதை தவிர வேறு தொழில் எதுவும் தெரியாத பாலியல் தொழிலாளர்கள்...

மாஸ்க் போடவில்லை என்றால் மீன் மார்க்கெட்டில் அனுமதிக்க கூடாது – அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் சென்னை காசிமேட்டில் பொதுமக்களுக்கு மீன் சில்லறை விற்பனை நடைபெறாது என்றும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இடத்தில் மீன் விற்பனை செய்யலாம், தற்போது துறைமுகத்தில் சில்லறை விற்பனை செய்யும் வியாபரிகளுக்கு...
Open

ttn

Close