Home தமிழகம் தளபதியை இழந்து தவிக்கிறேன்… வெற்றிவேல் மறைவுக்கு தினகரன் இரங்கல்

தளபதியை இழந்து தவிக்கிறேன்… வெற்றிவேல் மறைவுக்கு தினகரன் இரங்கல்

கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த அமமுக பொருளாளரும், முன்னாள் எம்எல்ஏவான வெற்றிவேலுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தளபதியை இழந்து தவிக்கிறேன்… வெற்றிவேல் மறைவுக்கு தினகரன் இரங்கல்

இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி,தினகரன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி குறிப்பில், “அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொருளாளரும் எனது இனிய நண்பருமான வெற்றிவேல் Ex.MLA அவர்கள் மறைந்தார் என்ற செய்தியை நம்ப முடியாமல் தவிக்கிறேன். மிகுந்த வேதனையும் சொல்ல முடியாத துயரமும் என் தொண்டையை அடைக்கிறது. புரட்சித்தலைவி அம்மா மற்றும் தியாகத் தலைவி சின்னம்மா அவர்களின் பேரன்பைப் பெற்றவர். என் மீது அளவிட முடியாத பாசம் கொண்டவர். எதையும் உரிமையோடு பளிச்சென பேசுபவர். என்ன நடந்தாலும் நான் தியாகத்தின் பக்கம், உண்மையின் பக்கமே நிற்பேன் என்று உறுதிபடச் சொல்லி இறுதிவரை கழகத்தின் மீது அளப்பரிய அன்பு கொண்டிருந்தவர்.

தளபதியை இழந்து தவிக்கிறேன்… வெற்றிவேல் மறைவுக்கு தினகரன் இரங்கல்

துரோகத்திற்கு எதிராக நாம் நடத்தி வருகிற புனிதப் போரில் ஒரு தளபதியாக நம்மோடு களத்தில் நின்றவர். வெற்றி… வெற்றி என வாய் நிறைய அழைத்து இனியாரிடம் பேசப்போகிறேன் என்று நினைக்கிற போதே எதற்காகவும் கலங்காத என் உள்ளம் கலங்கித் தவிக்கிறது. வெற்றிவேல் அவர்களின் மறைவு கழகத்திற்கும் தனிப்பட்ட முறையில் எனக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், கழகத்தினருக்கும் சொல்ல வார்த்தைகளின்றி தவிக்கிறேன். நம்முடைய லட்சிய பயணத்தில் வெற்றிவேல் என்கிற பெயர் எப்போதும் நிலைத்திருக்கும் அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற வேண்டுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தளபதியை இழந்து தவிக்கிறேன்… வெற்றிவேல் மறைவுக்கு தினகரன் இரங்கல்
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

ஒரே பெண்ணை காதலித்த நண்பர்கள்… ஆத்திரத்தில் தலையை துண்டித்த கொடூரம்!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் மதன்குமார். 21 வயதான இவர் பெயிண்டராக வேலை செய்து வந்த நிலையில் கடந்த 30ஆம் தேதி மந்தித்தோப்பு காட்டுப்பகுதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொலை...

கொரோனா வைரஸ் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டது – குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கும் ஆதாரங்கள்

கொரோனா வைரஸ் சீனாவில் இருந்துதான் பரவியது என்று அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில் அந்த குற்றச்சாட்டில் உறுதியாக இருந்து வரும் நிலையில், அந்த குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களையும் வெளியிட்டும்...

கோவையில் மேலும் சில கட்டுப்பாடுகள்…இன்று முதல் அமலுக்கு வந்தது!

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற பாதுகாப்பு நடைமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தின் முடிவில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் அதிகரித்துவரும் கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில்...

3வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை…50 வயது நபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை!

3 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை கொடுத்த 50 வயது நபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
- Advertisment -
TopTamilNews