ஊழல் நடைபோடும் தமிழகமே… டிடிவி தினகரன் நக்கல்

 

ஊழல் நடைபோடும் தமிழகமே… டிடிவி தினகரன் நக்கல்

ஸ்ரீவைகுண்டம் 4 முனை சந்திப்பு சாலையில் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஸ்ரீவைகுண்டம் தொகுதி அமமுக வேட்பாளர் ஏரல் எஸ். ரமேஷ் ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், “மாண்புமிகு அம்மா இருந்தவரை மக்கள் விரும்பாத நீட் உள்ளிட்ட எந்த திட்டத்தையும் தமிழகத்திற்குள் அனுமதிக்கவில்லை. சுனாமி அலை வீசுவதாக கூறும் ஸ்டாலின்; சுனாமி ஒரு அழிவு சக்தி என்பதை அவரே ஒப்புக்கொள்கிறார். 4 ஆண்டுகள் மத்திய அரசின் உதவியோடு ஆட்சியை நடத்திவிட்டார்கள். தமிழ்நாடே ஊழலில் தான் வெற்றி நடைபோடுகிறது.

ஊழல் நடைபோடும் தமிழகமே… டிடிவி தினகரன் நக்கல்

சுயதொழில் தொடங்க படித்த இளைஞர்கள், மகளிருக்கு கடனுதவி வழங்கப்படும். வீட்டுக்கு ஒருவருக்கு வேலைவாய்ப்பை வழங்குவதன் மூலம் ஒவ்வொருவரின் குடும்பமும் தன்னிறைவு பெறும், 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகள், தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாத ஓய்வூதியம் வழங்கப்படும். கழக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து திட்டங்களும் நிறைவேற்றக்கூடியவையே. தமிழகத்தில் பெண் போலீஸ் அதிகாரிக்கே பாதுகாப்பில்லை. தீயசக்தி, துரோக கூட்டணியின் சித்து வேலைகளை மக்கள் புறக்கணிப்பார்கள். கருத்துக்கணிப்பு என்ற பெயரில் மோசடி நடைபெறுவது மக்களுக்கு நன்றாக தெரியும். தீயசக்தி, துரோக கூட்டணி ஆகிய 2 கட்சிகளும் மக்களை ஏமாற்றிவருகின்றன. தப்பி தவறி திமுக ஆட்சிக்கு வந்துவிட்டால் மக்களின் சொத்துக்கள் சூறையாடப்படும். தீய சக்தியான திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க வேண்டியது தமிழக மக்களின் கடமை. தீயசக்தி, துரோக கூட்டணியின் சித்து வேலைகளை மக்கள் புறக்கணிப்பார்கள்” என தெரிவித்தார்.