குக்கர் விசிலடித்துக் கொண்டிருக்கிறது- டிடிவி தினகரன்

 

குக்கர் விசிலடித்துக் கொண்டிருக்கிறது- டிடிவி தினகரன்

சிவகாசி, சாத்தூரில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய டிடிவி தினகரன், “மத்திய மாநில அரசுகளின் தவறான கொள்கையால் பட்டாசு தொழில் நலிவடைந்து வருகிறது. பட்டாசு தொழிலை காக்கும் அளவில் அமமுக இருக்கும். மத்திய அரசின் ஆதரவுடன் இதுவரை ஆட்சியில் இருந்துவந்த அதிமுகவை விரட்டி அடிப்போம். இந்த துரோகிகளின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.

குக்கர் விசிலடித்துக் கொண்டிருக்கிறது- டிடிவி தினகரன்

அம்மாவின் ஆட்சியை மீண்டும் மக்களுக்கு கொடுக்க அமமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள். அலைகடலென திரண்டு இருக்கும் மக்களே, இது வேட்பாளரின் வெற்றியை கொண்டாடும் கூட்டம் போல் உள்ளது. ஆர்.கே.நகரில் தோன்றியது தான் நமது வெற்றி சின்னமான குக்கர் சின்னம், குக்கர் விசிலடித்துக் கொண்டிருக்கிறது. எடப்பாடி ஆடும் ஆடும் ஆட்டம் அப்படி உள்ளது. தமிழகம் முழுவதும் அவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டுங்கள். சந்தடி சாக்கில் திமுக ஆட்சியை பிடித்துவிடலாம் என முயற்சித்துக்கொண்டிருக்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்தால் கடையில் சுதந்திரமாக வியாபாரம் செய்ய முடியாது, பியூட்டி பார்லரில் வேலை செய்யமுடியாது” எனக் கூறினார்.