ஓபிஎஸ் அமைதியாக இருந்திருந்தால் முதல்வராகியிருக்கலாம்- டிடிவி தினகரன்

 

ஓபிஎஸ் அமைதியாக இருந்திருந்தால் முதல்வராகியிருக்கலாம்- டிடிவி தினகரன்

திருச்சி திருவானைக்காவலில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “தமிழக அரசு வெற்றி நடையெல்லாம் போடவில்லை. தள்ளாடுகிறது. மக்கள் நல திட்டங்கள் மக்களுக்கு முறையாக போய் சேரவில்லை. அதனையெல்லாம் மறக்கவே இப்படி விளம்பரம் செய்கின்றனர்.

ஓபிஎஸ் அமைதியாக இருந்திருந்தால் முதல்வராகியிருக்கலாம்- டிடிவி தினகரன்

நிகழ்காலத்தின் பரதனான துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் அமைதியாக இருந்திருந்தால் மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்று இருக்கலாம், ஆனால் ராவணனோடு(குருமூர்த்தி) சேர்ந்தததால் அவருக்கும், நாட்டுக்கும் பிரச்சனை. குருமூர்த்தி உட்பட யாரும் காப்பாற்ற முடியாத நிலையில் அவர் உள்ளார். ஓபிஎஸ் பரதனாக திரும்ப வந்தால் பார்க்கலாம். வரும் தேர்தலில் அமமுக அதிமுகவை மீட்டெடுத்து ஆட்சியைப் பிடிக்கும். ஸ்லீப்பர் செல்ஸ் என்பது அதிமுகவின் உண்மை தொண்டர்கள். சசிகலாவை வரவேற்று பார்த்து அசந்து போனவார்கள். சசிகலாவை காரில் அழைத்து செல்ல வந்த சம்மங்கி, தட்சிணாமூர்த்தி உள்ளிட்டவர்கள் தான் ஸ்லீப்பர் செல்ஸ். பாஜகவுடன் நான் கைகோர்த்து நிற்கவில்லை. தேவையான போது நாங்களும் பாஜகவை எதிர்ப்போம். மத்திய பட்ஜெட்டில் கொஞ்சம் நன்மைகளும் நிறைய தீமைகள் உள்ளன” என கருத்து தெரிவித்தார்.

தமிழக அரசியல் களத்தையும், அதிமுகவையும் ஒரு சேர அதிரவைப்பவர் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம். அரசியல் நிகழ்வுகள் இவரைச் சுற்றி அமைவதுபோல இருப்பது திட்டமிட்டதா அல்லது திட்டமிடாததா என குழம்பும் அளவுக்கு அவரது செயல்பாடுகள் உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் நீண்ட காலமாகவே சொல்லி வருகின்றனர். இந்த சூழலில் ஓபிஎஸ் உடன் சாஃப்ட் கார்னருடன் பேசியிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.