“வேட்டி அவிழ்வது கூட தெரியாமல் டிஜிபி அலுவலகம் நோக்கி அமைச்சர்கள் ஓடுகின்றனர்”

 

“வேட்டி அவிழ்வது கூட தெரியாமல் டிஜிபி அலுவலகம் நோக்கி அமைச்சர்கள் ஓடுகின்றனர்”

பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் இருந்து சசிகலா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பிய போது, அவருக்கு சொந்தமான காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டிருந்தது அதிமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, கட்சிக் கொடியை பயன்படுத்தக் கூடாது என அதிமுக அமைச்சர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இதனிடையே அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார், சி,வி சண்முகம் உள்ளிட்டோர் சென்னையில் டிஜிபி திரிபாதியை சந்தித்து சசிகலா மீது அதிமுக சார்பில் அமைச்சர்கள் இருமுறை புகார் அளித்தனர். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படக்கூடாது எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

“வேட்டி அவிழ்வது கூட தெரியாமல் டிஜிபி அலுவலகம் நோக்கி அமைச்சர்கள் ஓடுகின்றனர்”

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “ஆட்சி அதிகாரம் வைத்துள்ள அமைச்சர்கள் ஏன் பயப்படுகிறார்கள்? 4 ஆண்டுகள் கழித்து சசிகலா தமிழகம் வருகிறார். தமிழகம் முழுவதுமுள்ள தொண்டர்கள் அவரை வரவேற்க காத்திருக்கின்றனர். தமிழகம் வரும் சசிகலாவை வரவேற்பதை தவிர வேறு எண்ணம் எங்களுக்கு கிடையாது. ஆனால் ஏன் ஆட்சியில் இருப்பவர்கள் பயப்படுகிறார்கள் என்பது தெரியவில்லை. டிஜிபி அலுவலகத்திற்கு இரண்டு நாட்ளாக கட்டியிருக்கும் வேட்டி அவிழ்வது கூட தெரியாமல் ஓடுகின்றனர். என்ன பேசுவது என்று தெரியாமல் பேசுகிறார்கள்.இதெல்லாம் பார்க்கும்போது, அவர்கள் ஏன் இவ்வளது தரம் தாழ்ந்து போய் இருக்கிறார்கள் என்ற வருத்தமும் சதித்திட்டம் தீட்டுகிறார்களோ என்ற பயமும் உள்ளது” எனக் கூறிகின்றனர்.