சசிகலாவை திடீரென சந்தித்த டிடிவி தினகரன்: அரசியலுக்கு அழைப்பா?

 

சசிகலாவை திடீரென சந்தித்த டிடிவி தினகரன்: அரசியலுக்கு அழைப்பா?

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து ரிலீஸ் ஆன சசிகலா, அலைகடலென திரண்ட தொண்டர்களுக்கு மத்தியில் 23 மணி நேரம் பயணித்து சென்னை வந்தடைந்தார். அவரது வருகை அதிமுகவினர் வயிற்றில் புளியை கரைக்கச் செய்தது. சிறையில் இருந்து காய் நகர்த்திக் கொண்டிருந்த சசிகலா, சென்னை வந்த பிறகு என்னவெல்லாம் செய்யப் போகிறாரோ என புழுவாக துடித்துக் கொண்டிருந்தனர். ஆனால், எந்த வித பரபரப்பும் இல்லாமல் மௌனம் காத்தார் சசிகலா.

சசிகலாவை திடீரென சந்தித்த டிடிவி தினகரன்: அரசியலுக்கு அழைப்பா?

இதையடுத்து அமமுகவுடன் இணைந்து சசிகலா தேர்தல் பணிகளில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் அறிக்கை ஒன்று வெளியானது. தான் அரசியலில் இருந்து விலகப் போவதாக அதில் எழுதியிருந்தார். டிடிவி தினகரன் தலையில் இந்த செய்தி பேரிடியாக விழுந்தது. தான் விலகியது மட்டுமில்லாமல், நீயும் விலகி விடு என தினகரனிடம் சசிகலா சொன்னதாக தகவல்கள் வெளியானது. இதன் பின்புலத்தில் பாஜக காய் நகர்த்துவதாக கூறப்பட்டாலும், புலி பதுங்குவது பாய்வதற்காகத் தான் என்கிறார்கள் அவருடன் நெருக்கமானவர்கள்…

சசிகலாவை திடீரென சந்தித்த டிடிவி தினகரன்: அரசியலுக்கு அழைப்பா?

இந்த நிலையில், சென்னை தியாகராய இல்லத்தில் சசிகலாவுடன் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் சசிகலாவை திடீரென சந்தித்திருக்கிறார். அரசியலைவிட்டு ஒதுங்குவதாக சசிகலா அறிவித்துள்ள நிலையில், சசிகலாவை அவர் மீண்டும் அரசியலுக்கு அழைக்கிறார் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.