தடுமாறிக் கொண்டிருக்கும் திமுக அரசு : தினகரன் கடும் விமர்சனம்!!

 

தடுமாறிக் கொண்டிருக்கும் திமுக அரசு : தினகரன் கடும் விமர்சனம்!!

தமிழக ஆளுநர் உரை வழக்கமான சடங்காக அமைந்துள்ளது என்று தினகரன் விமர்சித்துள்ளார்.

16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் இன்று நடைபெற்றது .சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை தொடங்கிய கூட்டத்தொடரில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினார். விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் ரேஷன் கார்டு வழங்கப்படும், தமிழை இந்திய அலுவல் மொழியாக்க தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தும், கொரோனா மூன்றாவது அலை உருவானால் அதனை சமாளிக்க ஆக்சிஜன் உற்பத்திக்கு ரூபாய் 50 கோடி நிதி ஒதுக்கீடு, தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை குறித்து அடுத்த மாதம் வெள்ளை அறிக்கை விடப்படும், தமிழகத்தில் நீட் தேர்வால் மாணவர்கள் பாதிப்படையாமல் இருக்க தேவையான சட்டங்கள் நிறைவேற்றப்படும் உள்ளிட்ட பலவற்றை தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.

தடுமாறிக் கொண்டிருக்கும் திமுக அரசு : தினகரன் கடும் விமர்சனம்!!

ஆளுநர் உரை முடிந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் உரை ஏமாற்றம் அளிப்பதாகவும், நீட் தேர்வு ரத்து செய்வோம் என்று கூறிய திமுகவின் நிலைப்பாடு தற்போது மாறியுள்ளதாகவும், மாணவர்களுக்கான கல்விக் கடன் ரத்து குறித்து ஆய்வுகள் எதுவும் இடம்பெறவில்லை என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். கொரோனாவை கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டது என்று கூறிய அவர் கொரோனவால் ஏற்பட்ட மரணங்கள் மறைக்கப்பட்டுள்ளன என்றும் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

தடுமாறிக் கொண்டிருக்கும் திமுக அரசு : தினகரன் கடும் விமர்சனம்!!

இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழக ஆளுநர் உரை வழக்கமான சடங்காக அமைந்துள்ளது. வெறும் அறிவிப்புகளின் தொகுப்பாக இருக்கும் இந்த உரையில் உள்ள அம்சங்களை எந்த அளவிற்கு ஆட்சியாளர்கள் செயல்படுத்துவார்கள் என்று தெரியவில்லை.

ஏனெனில், மேகேதாட்டு அணை பிரச்னை, நீட் தேர்வு விவகாரம், பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரி குறைப்பு போன்றவற்றில் ஆக்கப்பூர்வமாக செயல்படாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் தி.மு.க அரசு ஆளுநர் உரை அறிவிப்புகளை எப்படி செயல்படுத்தப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.