அலைமோதும் கூட்டம் : ஸ்டாலினிடம் தினகரன் கோரிக்கை!

 

அலைமோதும் கூட்டம் : ஸ்டாலினிடம் தினகரன் கோரிக்கை!

ரெம்டெசிவிர் அனைத்து மருத்துவமனைகளிலும் விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் ஏற்கனவே கல்லீரல், சிறுநீரகம் போன்றவற்றில் பிரச்சினை இருந்தால் அவர்களுக்கு ரெம்டெசிவர் மருந்து பரிந்துரைக்கப்படுகிறது. இதனால் ரெம்டெசிவர் மருந்துகளை வாங்க பலரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் குவிந்து வந்தனர். இதனால் தொற்று மேலும் பரவும் அபாயம் ஏற்பட்டதால் இன்று முதல் நேரு விளையாட்டு அரங்கில் ரெம்டெசிவர் மருந்து விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தினசரி 300 பேர்களுக்கு ரெம்டெசிவர் மருந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலைமோதும் கூட்டம் : ஸ்டாலினிடம் தினகரன் கோரிக்கை!

இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “‘ரெம்டெசிவிர்’ ( Remdesivir) மருந்து விற்பனை செய்யும் மையங்களில் அலைமோதும் கூட்டத்தைத் தவிர்க்க அனைத்து மருத்துவமனைகளிலும் இந்த மருந்தினை விற்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக மருந்து வாங்க வருபவர்களும் நோய்த் தொற்றுக்கு ஆளாகும் அளவுக்கு இந்த மையங்களில் கூட்டம் அலை மோதுகிறது.

இதனை உடனடியாக முறைப்படுத்திட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து, தேவைப்படுவோர் அனைவருக்கும் எந்தவித சிரமமும் இன்றி ரெம்டெசிவர் மருந்து கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

மேலும் இம்மருந்து கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுவதை இரும்புக்கரம் கொண்டு தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.