• December
    09
    Monday

Main Area

Main



கட்சியை வளர்க்க அதிரடி திட்டம்... டி.டி.வி.தினகரன் போடும் பக்கா ப்ளான்..!

டி.டி.வி.தினகரன்
டி.டி.வி.தினகரன்

அமமுகவில் இருந்து இன்னும் 50 நிர்வாகிகள்  திமுக, அதிமுகவுக்கு  போவார்கள் என லிஸ்ட் போட்டு வைத்திருக்கிறார் டி.டி.வி.தினகரன். ஆனால் அவர்கள் போனால் போகட்டும். நம்ம கூட்டத்தில் கலந்து கொள்கிறவர்கள் பாதிக்கு மேல்  இளைஞர்கள்தான். அதனால் 50 வயதைத் தாண்டி கட்சி பொறுப்பில் இருக்கும் பெரும்பாலானவங்களுக்கு இனி வாய்ப்பு கொடுக்கப் போவதில்லை என முடிவு செய்திருக்கிறாராம் டி.டி.வி.ttv dhinakaran 

பழனியப்பன் உள்பட 50 வயதுக்கு மேற்பட்டோர் இருப்பதால் அவர்களுக்கு மட்டும் விதி விலக்கு உண்டாம். 
அமமுகவில் 30 வயதில் இருந்து 45 வயது வரைக்கும் இருக்கிற துடிப்பாக செயல்படுகிறவர்களுக்கு  பதவி தர முடிவு செய்திருக்கிறார்.

 TTV Dhianakaran

 ’பாஜக வரும் போகும். அது நமக்கு முக்கியமல்ல. நமக்கு நம்ம கட்சியைப் பலப்படுத்தணும்கிறதுதான் முக்கியம். அமமுக இப்ப எப்படி இருக்குங்கிறது முக்கியமில்ல. இன்னும் 10 வருஷத்துக்கு அப்புறம் எப்படி இருக்கப்போவுது அப்படிங்கறதுதான் முக்கியம். அதுக்காக இப்பவே ப்ளான் பண்றேன்” என தனது ஆதரவாளர்களிடம் சொல்லி வருகிறார் டி.டி.வி. TTV Dhinakaran
 

2018 TopTamilNews. All rights reserved.