‘பண நெருக்கடி’ அமமுகவை கலைக்கும் தினகரன்?!

 

‘பண நெருக்கடி’ அமமுகவை கலைக்கும் தினகரன்?!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தினகரன் கலைக்கவுள்ளதாக கடந்த சில நாட்களாக சமூகவலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. சசிகலா அரசியலில் இருந்து விலகி கொள்வதாக அறிவித்தது தினகரனுக்கு பேரதிர்ச்சியாம். அமமுக சட்டப்பேரவை தேர்தலில் சசிகலாவை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்க திட்டமிட்டிருந்த நிலையில் அமமுக தற்போதைய நிலை என்ன? தினகரன் உண்மையில் அமமுகவை கலைக்க உள்ளாரா என்ற கேள்வி வெகுவாக எழுந்துள்ளது.

‘பண நெருக்கடி’ அமமுகவை கலைக்கும் தினகரன்?!

இதுகுறித்து தினகரனின் ஆதரவாளர்கள் பிரபல ஊடகத்திடம் கருத்துக்களை பகிர்ந்துகொண்டுள்ளனர். அதில், சசிகலாவுக்காக தான் தினகரன் அமமுகவை தொடங்கினார். இடை தேர்தல், நாடாளுமன்ற தேர்தலை சந்தித்து, கணிசமான வாக்குகளை பெற்றோம். சசிகலா வெளியே வந்த போது எழுச்சிமிகு வரவேற்பை அளித்தோம்.

‘பண நெருக்கடி’ அமமுகவை கலைக்கும் தினகரன்?!

அத்துடன் சசிகலா ஆதரவுடன் தேர்தலை எதிர்கொள்ள அமமுகவினர் தயாராக இருந்தோம். ஆனால் சின்னம்மா சசிகலா திடீரென பின்வாங்கியது தினகரனுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. பொருளாதார ரீதியில் கட்சிநடத்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.

‘பண நெருக்கடி’ அமமுகவை கலைக்கும் தினகரன்?!

பொருளாதார நெருக்கடியில் உள்ள தினகரன் அதனால் தான் கட்சியை கலைக்க முடிவெடுத்தாராம். ஆனால் கட்சியில் உள்ள சில சீனியர்கள் தினகரனை சமாதானப்படுத்த முடிவை கைவிட்டுள்ளாராம். அதுத சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள தினகரனின் அமமுக கட்சி, எஸ்.டி.பி.ஐ போன்ற கட்சிகளுடன் 234 தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளதாக கூறப்படுகிறது.மறைமுகமாக அதிமுக தோல்வியை விரும்பும் தினகரன் தரப்பு ஒருபுறம் அதற்கான பணிகளை தீவிரமாக செய்து வருகிறதாம். அதனால் தான் மாவட்ட வாரியாக பணியை தீவிரப்படுத்துங்கள் என்று தினகரன் அமமுகவினருக்கு கட்டளை போட்டுள்ளாராம்.