“தியாகத்தின் பெருமையை போற்றும் திருநாள் பக்ரீத் ” இஸ்லாமியர்களுக்கு டிடிவி தினகரன் வாழ்த்து

 

“தியாகத்தின் பெருமையை போற்றும் திருநாள் பக்ரீத் ” இஸ்லாமியர்களுக்கு டிடிவி தினகரன் வாழ்த்து

பக்ரீத் பண்டிகை பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது. இறைவனின் தூதரான இப்ராஹிம் நபிகளாரின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்தாண்டு கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான பக்ரீத் நாளை( 1ம் தேதி) கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி அறிவித்துள்ளது. பக்ரீத் பண்டிகையை கொண்டாடும் இஸ்லாமியர்களுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தார்.

“தியாகத்தின் பெருமையை போற்றும் திருநாள் பக்ரீத் ” இஸ்லாமியர்களுக்கு டிடிவி தினகரன் வாழ்த்து

இந்த நிலையில் இஸ்லாமியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “தியாகத்தின் பெருமையை போற்றும் திருநாளான பக்ரீத் பண்டிகையை கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு இனிய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நன்னாளில் பசித்தவர்களுக்கு உணவும், துன்பப்படுபவர்களுக்கு உதவியும் எளியவர்களிடம் கருணையும் காட்டவேண்டும் என்ற நபிகள் பெருமானாரின் மொழியின் படி ஒவ்வொருவரும் நடந்துகொள்வோம். எந்த சூழலிலும் மனிதனையும் மாறாமல் நடந்து கொள்வோம். மனித சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் சக மனிதர்களின் நல்வாழ்வுக்கும் அவரவர் அளவில் இயன்ற தியாகத்தையும் தர்மத்தையும் செய்து சாதி மத வேற்றுமைகளை மறந்து அனைவரும் ஒற்றுமையோடு மனம் நிறைந்த மகிழ்ச்சியோடும் வாழ்ந்திட பக்ரீத் திருநாளில் வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.