• February
    26
    Wednesday

Main Area

Mainடி.டி.வி.தினகரனின் ரூ.2 கோடியை ஆட்டையை போட்ட தங்க. தமிழ்செல்வன்..? துரத்தி துரத்தி வெளுக்கும் ஆதரவாளர்கள்..!

தங்க தமிழ்செல்வன்
தங்க தமிழ்செல்வன்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தாறுமாறாக ஜெயித்த பின், தன்னை கண்ணாடியில் பார்த்த தினகரனுக்கு, ஏதோ மாவீரன் அலெக்ஸாண்டரைப் பார்ப்பது போல் இருந்ததாம். ஜெயலலிதாவுக்காவது ‘கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை’ எனும் நிலைதான். ஆனால், தினகரனோ ‘நினைவுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை’ என்றார். கெத்து உச்சத்தில் நின்ற அவரின் நிலை இன்று  கிட்டத்தட்ட ‘வெத்து’ ஆகிப்போய்விட்டது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.thanga tamilselvan

தினகரன் அணியின் மிக முக்கியஸ்தர்களாக இருந்த வி.பி.கலைராஜன், செந்தில்பாலாஜி, தங்கதமிழ்ச்செல்வன் ஆகியோர் அவரிடமிருந்து விலகி, தி.மு.க.வுக்கு சென்றுவிட்டனர். மல்ட்டி மில்லியனரான தினகரனுக்கே ஃபைனான்ஸ் பண்ணிய இசக்கி சுப்பையாவோ மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்துவிட்டார்.

பழனியப்பன், வெற்றிவேல், செந்தமிழன், கோவை சேலஞ்சர் துரை என்று வெகு சிலரை மட்டுமே வைத்துக்கொண்டு இப்போது ‘அ.ம.மு.க.’ வை ஓட்டிக் கொண்டிருக்கிறார் தினகரன். வி.பி. கலைராஜன், செந்தில் பாலாஜி ஆகியோர் பிரிந்து சென்ற பின் சுமார் ஒரு வார காலத்துக்கு அ.ம.மு.க.வின் இணையதள பிரிவினர் தங்களின் பக்கங்களில் ‘துரோகிகள்... காசுக்காக காட்டிக் கொடுத்த எட்டப்பன்கள்... நன்றி மறந்த நயவஞ்சகர்கள்...’ என்று திட்டிக் கொண்டிருந்தனர். அதன் பின் மறந்துவிட்டனர்.ttv dhinakaran

ஆனால் சமீபத்தில் பிரிந்து சென்ற தங்கதமிழ் செல்வனை மட்டும் இத்தனை நாட்களாகியு விடாமல் திட்டுகின்றனர். இப்படித்தான் என வகை தொகை இல்லாமல் அவ்வளவு வசவு மழை பொழிந்து கொண்டே இருக்கின்றனர் தங்கம் மீது. அதிலும் கடந்த சில நாட்களாக “மக்கள் செல்வர் தினகரனால்தான் அம்மா இருந்த காலத்திலும் சரி, அதன் பின்னும் சரி அரசியல் வாழ்க்கையை பெற்றார் தங்கம். தலைவர் தினகரன் கைகொடுக்காமல் போயிருந்தால், நயவஞ்சக பன்னீர்செல்வத்தின் பிடியில் சிக்கி சின்னாபின்னமாகி இருப்பார் தங்கம்.

தினகரனால்தான் ஜனரஞ்சக அரசியல் அந்தஸ்தும் அவருக்கு கிடைத்தது. ஆனால் அதையெல்லாம் மறந்து, நன்றி கெட்டு, துரோகம் செய்தபடி தி.மு.க.வில் போய் இணைந்துவிட்டார். போகும்போது வெறும் கையை வீசி சென்றிருந்தாலும் கூட நீ நல்லவன். ஆனால் மக்கள் செல்வரின் பணமான இரண்டு கோடி ரூபாயை அபேஸ் செய்து, ஆட்டயப்போட்டுவிட்டு இப்படி அங்கே போய் உட்கார்ந்து கொண்டு தி.மு.க.வின் ரத்தத்தை குடித்துக் கொண்டிருக்கிறது தங்கத்தமிழ்செல்வன் எனும் கொசு.” என்று தொடர்ந்து போட்டுத் தாக்கிக் கொண்டுள்ளனர்.thangatamilselvan

தன் மீதான எந்த விமர்சனத்துக்கும் சிரித்தபடி பதில் சொல்லும் தங்கத்தமிழோ, “கட்சி மாறியதற்காக இப்படி அபாண்டங்களை அள்ளி வீசலாமா? என்னிடம் எதற்காக, எவ்வளவு பணத்தை, எங்கே வைத்து தினகரன் கொடுத்தார் என்று ஆதாரத்தோடு சொல்லுங்கள். நான் அதற்கு ஆதாரத்துடன் கணக்கு சொல்கிறேன். பெயரை கெடுக்கும் நோக்கில் வதந்தியாய் பேசுவதென்றால், சூது எங்களுக்கும் தெரியும்.” என்று பதிலுக்கு பாய்ந்திருக்கிறார். வேலூர் தேர்தல் டென்ஷனுக்கு நடுவுல இந்த எண்டர்டெயின்மென்ட் நல்லாதான் இருக்குது!
 

2018 TopTamilNews. All rights reserved.