• July
    22
    Monday

Main Area

Main



தங்க.தமிழ்ச்செல்வனால் விஸ்வரூபம் என்ன, மருதநாயகம்கூட‌ எடுக்க முடியாது - டிடிவி தமாஷ்!

TTV Dinakaran
TTV Dinakaran
Loading...

அமமுகவில் அடுத்த 24 மணி நேரத்தில் அதிரடி உண்டு என்பதை முன்கூட்டியே கணித்திருந்தோம் அல்லவா? கணிப்பு மெய்யாகி, மெய் மெய்யப்பனாகிவிட்டோம். "என் மீது தவறு இருப்பதாக தினகரன் கருதினால் என்னை கட்சியில் இருந்து நீக்கட்டும்" என தங்கம் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்து புகைச்சல் உண்மை என்பதை உறுதிபடுத்திவிட்டார். முன்பாக, தினகரனின் உதவியாளருக்கு போன் போட்டு வண்டைவண்டையாக பேசியதும் வாசகர்களுக்கு நினைவிருக்கும்.

Thanga.TamilSelvan

சரி, பந்துவீசுபவரின் கையில் இருந்து பந்து விடுபட்டுவிட்டது. இப்போது பேட்ஸ்மேனின் முறை ஆயிற்றே? தினகரன் வாய்க்குள் மைக்கை விட்டு "தான் விஸ்வரூபம் எடுத்தால் அமமுக கட்சியே அழிந்துபோகும்" என தங்க.தமிழ்ச்செல்வன் கூறியிருக்கிறாரே என்று கேட்டிருக்கிறார்கள். தேர்தலில் ஜெயிப்பதில் மட்டும்தான் கொஞ்சம் சுணக்கம் இருக்கும் தினகரனிடம்.

Gift Box

இந்த பேட்டி, கேள்வி/பதில் எல்லாம் தண்ணி குடிப்பது மாதிரி. நிருபர்களின் கேள்விக்கு சிம்பிளா ஒரு பதிலைச் சொல்லிவிட்டு போய்விட்டார். அதாவது, "தங்க.தமிழ்ச்செல்வன் விஸ்வரூபம் எல்லாம் எடுக்க மாட்டார், என்னைப் பார்த்தால் பெட்டிப்பாம்பாய் அடங்கிவிடுவார்" என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார். இந்தப் பதிலில் "பெட்டிப் பாம்பாய்" என்ற வார்த்தைகளில் வரும் "பெட்டி"யில் ஏதோ உள்குத்து இருப்பதுபோல தெரிவது எனக்கு மட்டும்தானா? 

2018 TopTamilNews. All rights reserved.