“ஸ்டாலின் தான் வர்றாரு… அடுத்து எங்க சின்ன தளபதியும் வருவாரு” – பூரிக்கும் கொளத்தூர் மக்கள்! #kolathur

 

“ஸ்டாலின் தான் வர்றாரு… அடுத்து எங்க சின்ன தளபதியும் வருவாரு” – பூரிக்கும் கொளத்தூர் மக்கள்! #kolathur

கொளத்தூர் தொகுதி… அறிமுகமே வேண்டாம்… திமுக தலைவர் முதல்வர் வேட்பாளர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் தொகுதி. எடப்பாடி தொகுதியிலாவது எடப்பாடிக்கு எதிராக ஒருசிலர் கருத்து தெரிவித்திருந்தனர். அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்பதே கொளத்தூர் தொகுதி மக்கள் ஸ்டாலினுக்கு அமோக ஆதரவு கொடுக்கின்றனர். ஆரம்பத்தில் ஆயிரம் விளக்கு தொகுதியை தனது கோட்டையாக வைத்திருந்த ஸ்டாலின், தற்போது கொளத்தூரை அவ்வாறு மாற்றியிருக்கிறார்.

“ஸ்டாலின் தான் வர்றாரு… அடுத்து எங்க சின்ன தளபதியும் வருவாரு” – பூரிக்கும் கொளத்தூர் மக்கள்! #kolathur

2011ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கொளத்தூர் தொகுதியில் தொடர்ந்து இருமுறை வெற்றிபெற்றிருக்கிறார். அந்த இருமுறையும் அதிமுகவின் பெரும்புள்ளிகளான சைதை துரைசாமி, ஜேசிடி பிரபாகர் ஆகிய இருவரையும் வீழ்த்தியிருக்கிறார். மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். இப்போதும் அதிமுகவின் பெரிய தலைக்கட்டான ஜெயலலிதாவின் தீவிர விசுவாசி ஆதி ராஜாராம் மோதுகிறார்.

“ஸ்டாலின் தான் வர்றாரு… அடுத்து எங்க சின்ன தளபதியும் வருவாரு” – பூரிக்கும் கொளத்தூர் மக்கள்! #kolathur

தொகுதி நிலவரம் என்ன, ஸ்டாலின் தோற்க வாய்ப்பிருக்கிறதா என்பதை அறிய ஆவலுடன் நமது டாப் தமிழ் நியூஸ் குழு களத்தில் இறங்கியது. தொகுதியில் இறங்கினாலே தளபதி, தளபதி என எட்டுத்திக்கும் ஒலிப்பது நமக்கு கேட்டது. நாம் கருத்துக்கணிப்பு தான் கேள்வி கேட்கிறோம் என்பதை முன்கூட்டியே அறிந்து, எங்க தளபதி தான் என சூளுரைக்கிறார்கள் தொகுதி மக்கள். அந்தளவிற்கு தொகுதி மக்களின் மனநிலை ஸ்டாலினுக்கு மிக நெருக்கமாக இருக்கிறது.

“ஸ்டாலின் தான் வர்றாரு… அடுத்து எங்க சின்ன தளபதியும் வருவாரு” – பூரிக்கும் கொளத்தூர் மக்கள்! #kolathur

ஸ்டாலின் தான் வரப் போறாரு, விடியல் தருவாரு என்கின்றனர். இன்னும் சிலர் அடுத்து எங்க சின்ன தளபதியும் வருவாரு… 2021ல ஆட்சி அமையறதுக்கு அவரும் ஒரு காரணமா இருப்பாருனு சொல்கிறார்கள். அதிமுகவுக்கு எல்லாம் இங்கே சீனே இல்ல என்பது போன்றே அவர்கள் பதிலளிக்கிறார்கள். எடப்பாடி ஆட்சிக்கு எத்தனை மதிப்பெண் கொடுப்பீர்கள் என்று கேட்டால் ஜீரோ கூட இல்லை… மைனஸ் 10 வேணும்னா போட்டுக்கோங்க என்று அதகளம் செய்கிறார்கள்.

“ஸ்டாலின் தான் வர்றாரு… அடுத்து எங்க சின்ன தளபதியும் வருவாரு” – பூரிக்கும் கொளத்தூர் மக்கள்! #kolathur

2006ஆம் ஆண்டு தேர்தலில் இதே ஆதி ராஜாராம் ஸ்டாலினுடன் மோதி வெறும் 2 ஆயிரம் சொச்சம் வாக்குகளில் தோல்வியுற்றார். அதேபோல இப்போதும் டஃப் கொடுப்பாரா என்றால் சர்வநிச்சயமாக இல்லை என்பதே மக்களின் பதிலாக இருக்கிறது. ஸ்டாலின் பெரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறக் கூடிய வாய்ப்பும் இருப்பதாகவே தெரிகிறது. ஸ்டாலின் முதலமைச்சராவதை விட பெரிய சந்தோஷம் இல்லை என்கிறார்கள். இதுதான் கள நிலவரம்…. (கொளத்தூர் மக்களின் துள்ளலான பதில்களை முழுமையாக தெரிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவில் பாருங்கள்)